தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவரானார் சோனியா காந்தி! - இடைகால காங்கிரஸ் தலைவர்

டெல்லி: காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவராக சோனியா காந்தி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

சோனியா காந்தி

By

Published : Aug 10, 2019, 11:23 PM IST

கடந்த இரு மாதங்களாகக் காங்கிரஸ் கட்சி தலைமையின்றி தத்தளித்து வந்தது. இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்காக அக்கட்சியின் உயர்மட்டக் குழுவான செயற்குழு டெல்லியில் இன்று கூடியது. கட்சியின் முன்னாள் தலைவர்கள் சோனியா காந்தியும், ராகுல் காந்தியும் காலையில் செயற்குழு கூட்டத்தில் பங்கேற்றனர்.

காங்கிரஸ் கட்சியின் ஐந்து மண்டல நிர்வாகிகளும் பங்கேற்று தங்கள் கருத்துக்களைத் தெரிவித்தனர். அனைத்து மண்டல நிர்வாகிகளுமே, ராகுல் காந்தியே மீண்டும் கட்சித் தலைவர் பதவிக்கு வரவேண்டும் என்று வற்புறுத்தியதாக கூறப்படுகிறது. ராகுல் காந்திக்கு இதில் சம்மதம் இல்லாத நிலையில், புதிய தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்கு இழுபறி நிலை நீடித்தது. இதனிடையே இன்றிரவு 10.50 மணியளவில் செயற்குழு கூட்டம் நிறைவடைந்தது.

சோனியா காந்தி காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் என்று மூத்த தலைவரான குலாம் நபி ஆசாத் தெரிவித்தார். சோனியா காந்தி 1998 முதல் 2017ஆம் ஆண்டுவரை காங்கிரஸ் தலைவராகத் தொடர்ந்து 19 வருடங்கள் பதவி வகித்தவர். அந்தக் கட்சியில் நீண்டகால தலைவராகப் பதவி வகித்த பெருமை அவருக்கு உண்டு. காங்கிரஸ் பெரும் வீழ்ச்சியைச் சந்தித்த கால கட்டத்தில் தலைமை பதவிக்கு வந்த சோனியா காந்தி, அக்கட்சியை அடுத்தடுத்து ஆட்சி பீடத்தில் அமர வைத்ததில் முக்கிய பங்கு வகித்தவர் ஆவார்.

ABOUT THE AUTHOR

...view details