கர்நாடகாவின் முன்னாள் காங்கிரஸ் தலைவரான தினேஷ் குண்டுராவ் சமீபத்தில் தமிழ்நாடு, புதுச்சேரி, கோவா உள்ளிட்ட மாநிலங்களின் காங்கிரஸ் கட்சியின் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டு செயல்பட்டு வருகிறார். இந்நிலையில் இவருக்கு நடத்தப்பட்ட மருத்துவப் பரிசோதனையில் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது.
தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவுக்கு கரோனா - இந்தியா கோவிட் அப்டேட்ஸ்
பெங்களூரு: கர்நாடகாவின் முன்னாள் காங்கிரஸ் தலைவரும் தமிழ்நாடு உள்ளிட்ட மூன்று மாநிலங்களின் காங்கிரஸ் பொறுப்பாளராக இருக்கும் தினேஷ் குண்டுராவுக்கு கரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கடந்த சில நாட்களாக இவர் டெல்லி, தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் கட்சி பணிகளுக்காக பயணித்துள்ளார் எனத் தெரியவந்துள்ளது. மேலும் தொற்று கண்டறியும் முன்பு அந்த கடைசி மூன்று தினங்கள் தமிழ்நாட்டிற்கு வந்து திமுகவின் முக்கிய தலைவர்கள் பலரை சந்தித்திருக்கிறார். கரோனா உறுதி செய்யப்பட்டதினால் தனது வீட்டில் அடுத்த பத்து நாட்களுக்கு தன்மைப்படுத்திக் கொள்வதாகவும் தன்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் அனைவரும் தங்களை பரிசோத்திக் கொள்ளுமாறும் அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவுறுத்தியுள்ளார்.
இதையும் படிங்க:புதுச்சேரி காங்கிரஸ் பொறுப்பாளருக்கு கரோனா - பங்கேற்கவிருந்த நிகழ்ச்சிகள் ரத்து