பாஜக அரசின் பிளவுப்படுத்தும் மற்றும் சீர்குலைக்கும் அரசியலுக்கு எதிராக டெல்லியில் காங்கிரஸ் சார்பில் ராம்லீலா மைதானத்தில் பேரணி நடந்தது. இந்த பேரணியில் காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி, முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மற்றும் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோர் கலந்துக் கொண்டனர்.
இந்த பேரணிக்கு பாரத் பச்சோ என பெயரிடப்பட்டுள்ளது. காங்கிரஸ் மூத்த தலைவர் அஹமது பட்டேல், ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட், கே.சி. வேணுகோபால், முகுல் வாஸ்னிக், அவினாஷ் பாண்டே உள்ளிட்டோரும் இந்த பேரணியில் கலந்து கொண்டனர்.
இதைதொடர்ந்து மிகப்பெரிய அளவில் பொதுக்கூட்டம் ஒன்றும் நடக்கிறது. இந்த பேரணி பிளவு, ஆணவம் மற்றும் இயலாமை ஆகியவற்றிலிருந்து இந்தியாவை காப்பாற்றுவதற்கான செய்தி என வெளிநாட்டு வாழ் காங்கிரஸ் கட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டெல்லியில், பாஜக அரசுக்கு எதிராக காங்கிரஸ் பேரணி இந்த பேரணியில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டதாக கட்சியின் டெல்லி மாநில தலைவர் சுபாஷ் சோப்ரா தெரிவித்தார். நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் தொண்டர்கள் கூட்டம் கூட்டமாக வந்து பேரணியில் கலந்து கொண்டுள்ளனர் என காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் முகேஷ் சர்மா தெரிவித்தார்.
இதையும் படிங்க : குடியுரிமை சட்டத்தை தடுக்க இயலுமா?