தமிழ்நாடு

tamil nadu

By

Published : Jul 8, 2020, 9:56 PM IST

ETV Bharat / bharat

பண மழையில் ஆர்எஸ்எஸ் அமைப்பு: கேள்வி கேட்கும் காங்கிரஸ்

ராஜிவ் காந்தி பவுண்டேஷனுக்கு வழங்கப்படும் நன்கொடை குறித்து விசாரணை மேற்கொள்ளப்படும் என உள்துறை அமைச்சகம் அறிவிப்பு வெளியிட்டுள்ள நிலையில், ஆர்எஸ்எஸ் அமைப்புக்கு கோடிக்கணக்கில் வழங்கப்படுவதாக காங்கிரஸ் குற்றஞ்சாட்டியுள்ளது.

ஆர்எஸ்எஸ்
ஆர்எஸ்எஸ்

ராஜிவ் காந்தி பவுண்டேஷன் உட்பட நேரு குடும்பத்திற்கு சொந்தமான மூன்று அறக்கட்டளைகள் வரி ஏய்ப்பு, பண மோசடி செய்ததாகவும், இவ்விவகாரத்தில் விசாரணை செய்ய குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளதாகவும் உள்துறை அமைச்சகம் அறிவிப்பு வெளியிட்டது. இதனைத் தொடர்ந்து, விவேகானந்தா பவுண்டேஷன், இந்தியா பவுண்டேஷன், ஆர்எஸ்எஸ் அமைப்பு ஆகியவைக்கு வெளிநாட்டிலிருந்து கோடிக்கணக்கில் நன்கொடைகள் வருவதாகவும், இதுகுறித்து விசாரிக்க வேண்டும் எனவும் காங்கிரஸ் உள்துறைக்கு கோரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் அபிஷேக் மனு சிங்வி கூறுகையில், "பாஜக அறக்கட்டளைகளுக்கு வழங்கப்படுவதில் ஒரு சிறு துளி கூட ராஜிவ் காந்தி பவுண்டேஷனுக்கு வழங்கப்படுவதில்லை. இதில், மறைப்பதற்கோ, பதில் சொல்வதற்கோ ஒன்றும் இல்லை. ஏனெனில், நீங்கள் கேள்வி எழுப்பும்போது அதற்கு பதிலளிக்க சட்டத்தை மதிக்கும் நாங்கள் இருக்கிறோம்.

ஆனால், விவேகானந்தா பவுண்டேஷன், இந்தியா பவுண்டேஷன், ஆர்எஸ்எஸ் அமைப்பு ஆகியவைக்கு எதிராக இதுபோன்ற கேள்விகள் கேட்கப்படுவது இல்லை. அவர்களுக்கு மட்டும் ஏன் சிறப்பு சலுகைகள் அளிக்கப்படுகிறது" என்றார்.

இதையும் படிங்க:விபத்தில் சிக்கிய கரோனா நோயாளிகள்; தொட்டுத் தூக்கிய காவலர்கள்... பாராட்டிய அமைச்சர்

ABOUT THE AUTHOR

...view details