கரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் நாடாளுமன்றத்தின் மக்களவை, மாநிலங்களவையில் மழைக்கால கூட்டத்தொடர் திட்டமிட்டபடி, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் செப்டம்பர் 14 ஆம் தேதி தொடங்கியது.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரின் முதல் நாளிலேயே மக்களவையில் 8 சட்ட முன்வடிவுகளை மத்திய அரசு அறிமுகப்படுத்தியது.
குறிப்பாக, அத்தியாவசிய பொருள்கள் (திருத்த) மசோதா 2020, உழவர் உற்பத்தி வர்த்தக (ஊக்குவிப்பு மற்றும் வசதி) மசோதா 2020, விவசாயிகள் (அதிகாரம் மற்றும் பாதுகாப்பு அளித்தல்) விலை உத்தரவாதம் மற்றும் பண்ணை சேவைகள் மசோதா 2020 ஆகிய மூன்று சட்ட முன்முடிவுகளை மத்திய வேளாண் அமைச்சர் நரேந்திர சிங் தோமர் அறிமுகப்படுத்தினார்.
இந்த மூன்று சட்ட முன்வடிவுகளை காங்கிரஸ் கட்சி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் உழவர்களுக்கு எதிரான சதி என குறிப்பிட்டு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. நாடு முழுவதும் மத்திய அரசின் இந்த சட்ட முன்வடிவுகளை கண்டித்து போராட்டங்கள் வெடிக்கத் தொடங்கியுள்ளது.
இந்நிலையில், இதுதொடர்பாக கருத்து தெரிவித்துள்ள காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய் சிங், " கடந்த 2004ஆம் ஆண்டில் மாதிரி ஏபிஎம்சி சட்டத்தை வகுத்த அன்றைய காங்கிரஸ் தலைமையிலான யு.பி.ஏ. அரசு விதிகளை சீர்ப்படுத்தி 2013ஆம் ஆண்டில் இதற்கென ஒரு குழுவை அமைத்தது.