மகாராஷ்டிரா அரசியல்வாதி பால்கிருஷ்ணாவின் மகன் முகுல் வாஸ்னிக் (60). காங்கிரஸின் மூத்த தலைவராக விளங்குகிறார். இவர், தனது நீண்டக் கால தோழியான ரவீணா குரானாவை இன்று திருமணம் செய்துகொண்டார்.
இந்த திருமணத்தில் ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட், முன்னாள் மத்திய அமைச்சர் மணீஷ் திவாரி உள்ளிட்டோர் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர்.
ட்வீட்டரில் மணமக்களுக்கு கெலாட் அளித்துள்ள வாழ்த்துச் செய்தியில், “மணமக்கள் இதே மகிழ்ச்சியுடன் நீண்ட நாள்கள் சந்தோஷமாக வாழ இதயப்பூர்வ வாழ்த்துகள்” என கூறியிருந்தார்.
“இருவரையும் கடவுள் ஆசீர்வதிப்பாராக” என மணீஷ் திவாரி வாழ்த்தினார். 60 வயதை எட்டியிருந்தாலும், முகுல் வாஸ்னிக்குக்கு இது முதல் திருமணமாகும். கடந்தாண்டு ஆகஸ்ட் மாதத்தில் காங்கிரஸ் தலைவர் பட்டியலில் முகுல் வாஸ்னிக் பெயரும் இருந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:ம.பி.,யில் மாயமான எம்.எல்.ஏ. திரும்பி வந்தார்!