கர்நாடகாவில் தொடர்ந்து அரசியல் குழப்பம் நீடித்து வருகிறது. ஆளும் காங்கிரஸ் - மதச்சார்பற்ற கூட்டணி அரசு கவிழுமா அல்லது மாற்று அமைச்சரவை அமைக்கப்படுமா என்பது குறித்து பல்வேறு கேள்விகள் எழுப்பட்டு வருகின்றன. கர்நாடகாவில் தொடரும் அரசியல் குழப்பத்துக்கு காரணம் பாஜக என காங்கிரஸ் விமர்சித்து வருகிறது.
கர்நாடகா அரசியல் சூழ்நிலை குறித்து விவாதிக்க கவன ஈர்ப்பு தீர்மானம்! - காங்கிரஸ்
டெல்லி: கர்நாடகாவில் நடக்கும் அரசியல் சூழ்நிலை குறித்து மக்களவையில் விவாதிக்க காங்கிரஸ் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்துள்ளது.
congress
எனவே, கர்நாடகாவில் நடக்கும் அரசியல் சூழ்நிலை குறித்து மக்களவையில் விவாதிக்க காங்கிரஸ் கட்சியின் மக்களவை குழு தலைவர் அதிர் ரஞ்சன் சவுதிரி சிறப்பு, கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்துள்ளார். இதேபோல், பாகிஸ்தானில் சிறைவைக்கப்பட்டுள்ள ஆந்திர மீனவர்களை மீட்பது குறித்து விவாதிக்க ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் விஜய சாய் ரெட்டி சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்துள்ளார்.