கரோனா வைரஸ் நோய் காரணமாக அமல்படுத்தப்பட்ட ஊரடங்கால் பல்வேறு தரப்பினர் பாதிக்கப்பட்டனர். குறிப்பாக, அடிப்படை வசதிகளின்றி வெளிமாநில தொழிலாளர்கள் சிரமத்திற்கு உள்ளாகினர். அவர்களை சொந்த மாநிலத்துக்கு இட்டுச் செல்லும் வகையில், ரயில்வே துறை ஷ்ராமிக் சிறப்பு ரயிலை இயக்கியது. ஆனால், ரயிலில் பயணம் செய்த தொழிலாளர்கள் உணவின்றி தவித்துள்ளனர். இதனால், பலர் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், வெளிமாநில தொழிலாளர்களின் சிறப்பு ரயில் குறித்து உண்மைக்கு புறம்பான தகவல்களை வெளியிட்ட ரயில்வே துறை அமைச்சர் பதவி விலக வேண்டும் என காங்கிரஸ் கோரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் அபிஷேக் மனு சிங்வி செய்தியாளர்களிடம் பேசுகையில், "ரயிலில் பயணம் செய்த வெளிமாநில தொழிலாளர்கள் குறித்து பொது மக்களிடம் உண்மைக்கு புறம்பான தகவல்களை மத்திய அரசு கூறியுள்ளது தெரியவருகிறது.