தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

தாதா துபே என்கவுன்டர்: நீதிமன்ற விசாரணை கோரும் காங்கிரஸ்! - காங்கிரஸ் கட்சியின் தலைமை செய்தித் தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜேவால

டெல்லி: தாதா விகாஸ் துபேவின் என்கவுன்ட்டர் சம்பவத்தில் உச்சநீதிமன்ற நீதிபதி தலைமையிலான உயர் மட்ட விசாரணைக்குழு ஆராய வேண்டும் என காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது.

தாதா விகாஸ் என்கவுன்ட்டர் தொடர்பில் உச்ச நீதிமன்ற நீதி விசாரணை நடத்த வேண்டும்!
தாதா விகாஸ் என்கவுன்ட்டர் தொடர்பில் உச்ச நீதிமன்ற நீதி விசாரணை நடத்த வேண்டும்!

By

Published : Jul 11, 2020, 1:57 AM IST

Updated : Jul 11, 2020, 3:12 AM IST

இது தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் தலைமை செய்தித் தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜேவாலா கூறுகையில், "உத்தரப் பிரதேசத்தை "குற்றங்களின் பிரதேசம்" என்ற நிலைக்கு யோகி ஆதித்யநாத் தலைமையிலான மாநில அரசு மாற்றியுள்ளது.

அம்மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு எப்போதும் இல்லாத அளவு மிக மோசமான நிலையை அடைந்துள்ளது. இதன் விளைவாகவே விகாஸ் துபே போன்ற பயங்கரமான குற்றவாளிகள், தாதாக்கள் வளர்ந்து வருகின்றனர்.

விகாஸ் துபே போன்ற குற்றவாளிகளை வளர்த்து பாதுகாத்தவர்கள் பற்றிய உண்மை வெளிவர வேண்டும். அதுவே தங்களின் உயிரை தியாகம் செய்த எட்டு காவல்துறையினருக்கு நீதி செய்வதாகும்.

விகாஸ் துபே உயர்மட்ட அரசியல் தலைவர்கள் மற்றும் அரசாங்க அலுவலர்களோடு மிக நெருக்கமாக இருந்தாரா? அதிகாரத்தில் அமர்ந்திருந்தவர்களுக்கு பல்வேறு வேலைகளை அவர் செய்துள்ளாரா? விகாஸ் துபே அதிகாரத்துடன் உறவை பலப்படுத்த பயன்படுத்திய ரகசியங்கள் என்ன? விகாஸ் துபே ஏன் அதில் சேர்க்கப்படவில்லை? அவர் உஜ்ஜைனில் சரணடைந்தார்?

உடன் சென்ற ஊடக வாகனங்கள் ஏன் திடீரென நிறுத்தப்பட்டன? விகாஸ் துபே சார்ட்டர் விமானம் மூலம் கொண்டு வரப்படுவார் என்று முன்னர் கூறப்பட்டது. பின்னர் இந்த முடிவு ஏன் மாற்றப்பட்டது? ஒரு சிறப்பு அதிரடி படையின் (எஸ்.டி.எஃப்) சஃபாரி வண்டியிலிருந்து எப்போது, ​​எப்படி அவர் மஹிந்திரா டி.யூ.வி 300 வாகனத்திற்கு மாற்றப்பட்டார்?

அவரது கால்களில் இரும்பு சங்கிலி பூட்டப்பட்டிருந்த நிலையில் எப்படி அவர் திடீரென ஓட முயன்றார்? ஓடியவரை காவல்துறையினர் பின்னால் இருந்து சுட்டனர். ஆனால் குண்டுகள் எப்படி அவரது மார்பில் முன்னோக்கி பதுங்கி இருந்தன ?

இப்படி பல கேள்விகளுக்கு உண்மையான பதில் இதுவரை கிடைக்கவில்லை. இந்த மர்மங்கள் விலக வேண்டும். உண்மை என்னவென்பது நாட்டு மக்களுக்கு தெரிய வேண்டும்.

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள், அரசியல் படுகொலைகள் என ஆட்சியில் உள்ளவர்களுடனான துபேவின் உறவை அம்பலப்படுத்த உச்ச நீதிமன்ற நீதிபதியின் தலைமையில் விசாரணை நடத்தப்பட வேண்டும்" என வலியுறுத்தினார்.

இதையும் படிங்க: என்கவுன்ட்டர் செய்யப்பட்ட துபே: நடந்தது என்ன? திடுக்கிடும் தகவல்கள்

Last Updated : Jul 11, 2020, 3:12 AM IST

ABOUT THE AUTHOR

...view details