காங்கிரஸ் மூத்தத் தலைவர் மீம் அப்சல் டெல்லியில் இன்று (மார்ச்13) செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது செய்தியாளர்கள் கேட்ட பல்வேறு கேள்விக்குப் பதிலளித்தார். குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக போராடியவர்களின் புகைப்படம் மற்றும் முகவரியுடன் உத்தரப் பிரதேசத்தில் வைக்கப்பட்ட பதாகை குறித்தும் அவர் பேசுகையில், 'இது சங்கடமான நிகழ்வு' என்றார்.
இது குறித்து அவர் மேலும் பேசுகையில், 'டெல்லி கலவரத்தில் 54க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர். இந்த வெகுஜன மக்கள் மீது நடத்தப்பட்ட படுகொலைக்கு பொறுப்பேற்று, அமித் ஷா தனது பதவியை ராஜினாமா செய்திருக்க வேண்டும்.