இரண்டு ஆண்டுகளுக்கு முன்னதாக பாஜகவைச் சேர்ந்த லுங்கோசெய் ஜோ என்பவரின் வீட்டிலிருந்து ரூ. 40 கோடி மதிப்பிலான போதைப்பொருள்களை காவல் துறையினர் பறிமுதல் செய்ததோடு, அவரையும் கைது செய்தனர். இந்த வழக்கில் ஏராளமான முக்கிய தலைவர்கள் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாயின.
ஆனால் போதைப் பொருள் கடத்தல் தடுப்புப்பிரிவு கண்காணிப்பாளர் தவினஜம் பிருந்தா மணிப்பூர் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பிரமான பத்திரத்திற்கு பின், லுங்கோசெய் ஜோவுக்கு மூன்று வாரம் பிணை வழங்கப்பட்டது.
இதுகுறித்து மணிப்பூர் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ஓக்ராம் ஐபோபி பேசுகையில், ''கடந்த சட்டப்பேரவை தேர்தல் பரப்புரையின்போதே போதைப் பொருள் கடத்தல் வழக்கில் தொடர்புடைய முக்கியப் புள்ளிகள் பற்றி காங்கிரஸ் கட்சியினர் பேசினோம். முதலைமைச்சர் பைரன் சிங் தார்மீக பொறுப்பேற்று தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். இந்த வழக்கினை சிபிஐ போன்ற அதிகாரமிக்க அலுவலர்களால் விசாரிக்கப்பட வேண்டும்.