தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

டெல்லி வன்முறை பாதித்த பகுதிகளைப் பார்வையிட காங்கிரஸ் குழு அமைப்பு!

டெல்லி வன்முறையில் பாதிக்கப்பட்ட பகுதிகளைப் பார்வையிட காங்கிரஸ் குழு அமைத்துள்ளது.

Congress delegation to visit violence-hit Delhi areas
Congress delegation to visit violence-hit Delhi areas

By

Published : Feb 28, 2020, 7:46 PM IST

குடியுரிமை திருத்தச் சட்டம் தொடர்பாக டெல்லியில் நடைபெற்ற போராட்டம் கடந்த நான்கு நாள்களாக வன்முறையாக மாறியது. இந்த வன்முறையில் தலைமைக் காவலர் ரத்தன் லால், உளவுப் பிரிவு பணியாளர் 26 வயதான அன்கித் சர்மா உள்பட 42 பேர் உயிரிழந்துள்ளனர்.

காயமடைந்த இரண்டாயிரத்திற்கும் மேற்பட்டோர் சிகிச்சைப் பெற்றுவருகின்றனர். இது தொடர்பாக டெல்லியில் 123 வழக்குகள் பதியப்பட்டுள்ளது.

இந்நிலையில், டெல்லி வன்முறையில் பாதிக்கப்பட்ட பகுதிகளைப் பார்வையிட காங்கிரஸ் குழு அமைத்துள்ளது. இது தொடர்பாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் கே.சி. வேணுகோபால் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

கே.சி. வேணுகோபால் அறிக்கை

அதில், காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தியால் இந்தக் குழு அமைக்கப்பட்டுள்ளது. இதில் காங்கிரஸ் மூத்தத் தலைவர்கள் முகுல் வாஸ்னிக், சக்திசின்க் கோஹில், தாரிக் அன்வர், குமாரி செல்ஜா, சுஷ்மிதா தேவ் ஆகியோர் அடங்கிய ஐந்து பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழு பாதிக்கப்பட்ட பகுதிகளுக்குச் சென்று நிலைமையை அறிந்து அறிக்கையை சமர்ப்பிக்கும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க...மருத்துவர் நியமனத்தில் முறைகேடு: பேரவை துணைத் தலைவரே புகாரளித்ததால் பரபரப்பு!

ABOUT THE AUTHOR

...view details