மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி படுதோல்வி அடைந்தது. இரண்டாவது முறையாக பாஜக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்துள்ளது. இந்நிலையில் காங்கிரஸ் கட்சியில் முக்கிய பொறுப்பு வகிக்கும் 120 பேர் பதவி விலகினர்.
'காங்கிரஸ் முதலமைச்சர்கள் பதவி விலக வேண்டும்..!' - காங். எம்பி வலியுறுத்தல்
டெல்லி: "மக்களவைத் தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முதலமைச்சர்கள் பதவி விலக வேண்டும்" என்று கூறி அக்கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் பிரதாப் சிங் பாஜ்வா அதிர்ச்சி அளித்துள்ளார்.
இது குறித்து காங்கிரஸ் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் பிரதாப் சிங் பாஜ்வா கூறுகையில், "காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி எந்த முடிவு எடுத்தாலும் அது கட்சியின் நல்லதுக்காகவே இருக்கும். நாங்கள் அவருக்கு துணையாக இருக்கிறோம். காங்கிரஸ் கட்சியின் தோல்விக்கு பொறுப்பேற்று காங்கிரஸ் கட்சியின் செயற்குழு உறுப்பினர்கள், மாநில தலைவர்கள், முதலமைச்சர்கள் என அனைவரும் பதவி விலக வேண்டும்" என்றார்.
முதலமைச்சர்கள் உட்பட அனைவரும் பதவி விலக வேண்டும் என காங்கிரஸ் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் தெரிவித்திருப்பது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.