தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

டெல்லி சட்டப்பேரவை தேர்தல்: காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் இன்று வெளியிட வாய்ப்பு - டெல்லி சட்டப்பேரவைத் தேர்தல்

டெல்லி: சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியலை கட்சி தேர்தல் குழு இன்று அறிவிக்கப்படலாம் எனத்தெரிகிறது.

Congress candidates for Delhi polls
Congress candidates for Delhi polls

By

Published : Jan 17, 2020, 9:01 AM IST

டெல்லி சட்டப்பேரவைக்கு அடுத்த மாதம் 8ஆம் தேதி தேர்தல் நடக்கிறது. இந்தத் தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சி வேட்பாளர்களின் பட்டியல் நேற்று இறுதி செய்யப்பட்டுள்ளதாக அக்கட்சியின் டெல்லி மாநிலத் தலைவர் சுபாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், 'டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் பெரும்பாலான இடங்களைப் பற்றி விவாதித்துள்ளோம். ஆகையால் கட்சியின் இடங்களைப் பொறுத்தவரையில் உயர் மட்டகுழுவே முடிவெடுக்கும் எனவும், தேர்தல்களை நிர்வகிக்கும் பொறுப்பு தனக்கு வழங்கப்பட்டுள்ளதால் தான் போட்டியிட மாட்டேன்' என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும், டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் போட்டியிடும் தொகுதிக்கான காங்கிரஸ் வேட்பாளர் யார் என்பதை முடிவு செய்யவில்லை என அக்கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. அதேபோல் கூட்டணிக் கட்சியான ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சிக்கு நான்கு இடங்களையும், மீதமுள்ள இடங்களில் சோப்ரா தலைமையிலான குழு நியமித்த வேட்பாளர்களும் போட்டியிடுவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எழுவது சட்டமன்ற தொகுதிகளைக் கொண்டுள்ள டெல்லி சட்டப்பேரவை தேர்தலின் வாக்கெடுப்பு, பிப்ரவரி எட்டாம் தேதியும்,
வாக்கு எண்ணிக்கை பிப்ரவரி 11ஆம் தேதி நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: இஸ்ரோவின் ஜிசாட்-30 செயற்கைக்கோள் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது!

ABOUT THE AUTHOR

...view details