பல மாதங்களாகவே நாட்டில் பொருளாதார மந்தநிலை நிலவுவதாக பல தரப்பினர் குற்றஞ்சாட்டி வருகின்றனர். கடந்த மூன்றாண்டுகளில் இல்லாத அளவுக்கு அக்டோபர் மாதத்தில் வேலைவாய்ப்பின்மை 8.5 விழுக்காடு உயர்ந்துள்ளதாக சி.எம்.ஐ.இ. (Centre For Monitoring Indian Economy) என்ற அமைப்பு தகவல் வெளியிட்டுள்ளது.
எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்குமா காங்கிரஸ்? - காங்கிரஸ் நாடு தழுவிய போராட்டம்
டெல்லி: பொருளாதார மந்தநிலையை குறிவைத்து காங்கிரஸ் நடத்தும் நாடு தழுவிய போராட்டத்தில் எதிர்க்கட்சிகளின் ஆதரவை கோர அக்கட்சி முயன்றுவருகிறது.
நாட்டின் தேவையை அதிகரிக்க மத்திய அரசு பல முயற்சிகள் எடுத்து வந்தபோதிலும், உற்பத்தியில் தொடர்ந்து மந்தநிலை நிலவிவருகிறது. உள்கட்டமைப்புத்துறையின் வளர்ச்சி 5.2 ஆக பதிவாகியுள்ளது. பல ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மோசமான வளர்ச்சியை இத்துறை பதிவு செய்துள்ளது.
இந்நிலையில், பொருளாதார மந்தநிலை, வேலைவாய்ப்பின்மை, விவசாய பிரச்னை போன்ற பல விவகாரங்களை முன்வைத்து காங்கிரஸ் கட்சி நாடு தழுவிய போராட்டத்தை நடத்தவுள்ளது. 10 நாட்கள் நடக்கவுள்ள இந்த போராட்டத்தில் எதிர்க்கட்சிகளின் ஆதரவை கோர நவம்பர் 4ஆம் தேதி அக்கட்சி ஒரு கூட்டத்தை நடத்தவுள்ளது. இதில் பங்கேற்க எதிர்க்கட்சி தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.