தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

புதிய தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் பணியை தொடங்கியது காங்கிரஸ்

காங்கிரஸ் கட்சிக்கான புதிய தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தலை நடத்தும் பணி தொடங்கியுள்ளதாகவும் 2021ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சிக்கு புதிய தலைவர் தேர்ந்தெடுக்கப்படுவார் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Organisational elections
காங்கிரஸ் கட்சி புதிய தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் பணி தொடக்கம்

By

Published : Oct 17, 2020, 2:53 PM IST

காங்கிரஸ் கட்சிக்கு புதிய தலைவரை தேர்ந்தெடுக்கும் பணியை அக்கட்சியின் மத்திய தேர்தல் குழு தொடங்கியுள்ளது. புதிய தலைவரை தேர்ந்தெடுக்கும் பணி விரைவாக நடைபெற்று வருவதாகவும், 2021ஆம் ஆண்டு புதிய தலைவர் தேர்ந்தெடுக்கப்படுவார் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

மதுசூதன் மிஸ்திரி எம்பி தலைமையில், புதன்கிழமை நடந்த கூட்டத்தில், கிரிஷ்ணா பைரே கவுடா, அர்விந்தர் சிங்க் லவ்லி, ஜோதி மணி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

இது கட்சியின் அமைப்பு ரீதியான பிரச்னைகள் குறித்து விவாதிப்பதற்கான அறிமுகக்கூட்டம் என்று அக்குழுவின் உறுப்பினர் தெரிவித்துள்ளார். தேர்தலுக்கான வரைமுறைகளை நவம்பர் மாதத்திற்குள் இறுதி செய்ய வேண்டும் என இக்கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் காரிய கமிட்டி கூடியது.

காங்கிரஸ் காரிய கமிட்டிக்கான தேர்தல் கடைசியாக 1997ஆம் ஆண்டு நடைபெற்றது. கட்சிக்குள் தேர்தல் நடத்தவேண்டும் என குலாம் நபி ஆசாத், கபில் சிபில் உள்ளிட்ட 23 தலைவர் சோனியா காந்திக்கு கடிதம் எழுதினர். இதைத்தொடர்ந்து மத்திய தேர்தல் குழு கடந்த மாதம் 11ஆம் தேதி உருவாக்கப்பட்டது. காங்கிரஸ் கட்சியின் விதிப்படி ஜனவரி மாதத்திற்குள் காரிய கமிட்டி கூடவேண்டும்.

1,200 உறுப்பினர்களைக் கொண்ட காங்கிரஸ் காரிய கமிட்டி உறுப்பினர்கள் வாக்களித்து கட்சியின் தலைவரை தேர்ந்தெடுக்கும் வரையிலான பணிகளுக்கு மூன்று மாதங்கள் எடுத்துக்கொள்ளும். காங்கிரஸ் கட்சியின் தலைவராக சோனியா காந்தி தொடரவேண்டும் என பெரும்பாலான மூத்த தலைவர்கள் விரும்புகின்றனர்.

இதையும் படிங்க: நெருங்கும் பிகார் தேர்தல்; கடும் சவால்களை எதிர்கொள்ளும் நிதிஷ் குமார்!

ABOUT THE AUTHOR

...view details