தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

புதுச்சேரி சட்டப்பேரவை துணைத்தலைவர் பதவிக்கு எம்.என்.ஆர். பாலன் தேர்வு! - புதுச்சேரி சட்டப்பேரவை துணைத்தலைவர் தேர்வு

புதுச்சேரி: காங்கிரஸ் கட்சியின் சட்டப்பேரவை உறுப்பினர் எம்.என்.ஆர். பாலன், புதுச்சேரி சட்டப்பேரவை துணைத்தலைவராக போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

congress balan

By

Published : Sep 4, 2019, 12:41 PM IST

புதுச்சேரி சட்டப்பேரவை சபாநாயகராக இருந்த வைத்தியலிங்கம் நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றிபெற்றார். இதனையடுத்து, துணைத் தலைவராக இருந்த சிவக்கொழுந்து சபாநாயகராக தேர்ந்தெடுக்கப்பட்டதால், துணை சபாநாயகர் பதவி காலியாக இருந்தது. இந்நிலையில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சட்டப்பேரவை உறுப்பினர் எம்.என்.ஆர். பாலன் தனது சுற்றுலா வளர்ச்சி கழக பதவியை நேற்று ராஜினாமா செய்தார்.

அதைத்தொடர்ந்து துணை சபாநாயகர் தேர்தலில் போட்டியிடுவதற்காக சட்டப்பேரவை செயலர் வின்சென்ட் ராயிடம், பாலன் வேட்பு மனு தாக்கல் செய்திருந்தார். அதையடுத்து அவர் தற்போது புதுச்சேரி சட்டப்பேரவையின் துணைத்தலைவராக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details