தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

ஜார்க்கண்டில் பயிர்க்கடன் தள்ளுபடி: காங்கிரஸ் வாக்குறுதி - ஜார்க்கண்டில் பயிர்கடன் தள்ளுபடி

ராஞ்சி: ஜார்க்கண்ட் மாநிலத்தில் ரூ.2 லட்சம் வரையிலான பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்படும். மற்ற பிரிவுகளுக்கான நன்மைகளை பாதிக்காமல், பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இட ஒதுக்கீடு 27 சதவீதமாக உயர்த்தப்படும் என்று காங்கிரஸ் தனது தேர்தல் அறிக்கையில் கூறியுள்ளது.

Congress announces loan waiver for Jharkhand

By

Published : Nov 24, 2019, 9:50 PM IST

ஜார்க்கண்ட் மாநில சட்டப்பேரவைக்கு ஐந்து கட்டங்களாக தேர்தல் நடக்கிறது. இந்த நிலையில் காங்கிரஸ் தனது தேர்தல் அறிக்கையை இன்று வெளியிட்டது. அந்த அறிக்கையில், ஜார்க்கண்டில் பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்படும், விவசாய பொருட்களுக்கு உரிய விலை மற்றும் மகாத்மா காந்தி வேலை வாய்ப்பு உறுதி திட்டம் வலுப்படுத்தப்படும் என்று தெரிவித்துள்ளது.

தேர்தல் அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது:-

  • ஒவ்வொரு குடும்பத்திலிருந்தும் ஒரு உறுப்பினருக்கும் வேலை வழங்கப்படும்.
  • ஒரு குடும்பத்தைச் சேர்ந்த ஒவ்வொரு பெண் குழந்தைக்கும் மாதாந்திர வருமானம் ரூ.10 ஆயிரம் கிடைக்க ஏற்பாடு.
  • ஆதரவற்ற பெண்களுக்கு இலவச பயணத் திட்டம். அரசு பேருந்துகளில் முற்றிலும் இலவச பயணம்.
  • காவலர் படையில் பெண்கள் எண்ணிக்கை 33 சதவீதமாக உயர்த்தப்படும்.
  • வீடு அல்லது சொந்த நிலம் இல்லாதவர்களுக்கு வீடு கட்டிக் கொடுக்கப்படும்.
  • நடுத்தர வருவாய் கொண்ட பள்ளி மாணவர்களுக்கு தனியார் பள்ளிகளில் 50 சதவீத கட்டண தள்ளுபடி.
  • மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்புத் திட்டம் வலுப்படுத்தப்படும்.
  • இச்சா-கார்காய் திட்டம், கோயல்-கரோ திட்டம், அதானி கோடா திட்டம், பரசி தங்க சுரங்க குத்தகை திட்டம் ஆகியவை ரத்து செய்யப்படும்.
  • மற்ற பிரிவுகளுக்கான நன்மைகளை பாதிக்காமல், பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இடஒதுக்கீடு 27 சதவீதமாக உயர்த்தப்படும்.
  • ரூ.2 லட்சம் வரையிலான பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்படும்.

இவ்வாறு காங்கிரஸ் தனது தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளித்துள்ளது.

இதையும் படிங்க: ஜார்க்கண்ட் சட்டப்பேரவைத் தேர்தல் குறித்து காங்கிரஸ் ஆலோசனை

ABOUT THE AUTHOR

...view details