காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் பவன் தொரா, காணொலி வாயிலாக செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், "2014 தேர்தலுக்கு முன் எல்லை பிரச்னை குறித்து பேசிய பிரதமர் மோடி, தேர்தலில் அவரை அடையாள படுத்திக்கொள்ள பல முயற்சிகளை எடுத்தார். அதற்காக பாஜகவினர், சீன நிறுவனங்களுடன் கூட்டு வைத்து பல கோடி ரூபாயை செலவழித்து, தேர்தலில் அடையாளத்தை தேடிக்கொண்டனர்.
மேலும், பிரதமர் மோடி தற்போது எல்லையில் நடக்கும் பிரச்னைகளை மூடி மறைப்பதை நாம் பார்க்கிறோம். எல்லை விவகாரத்தில் அமைதியாக இருந்து நாட்டை தவறாக வழி நடத்திவருகிறார். அதுமட்டுமின்றி அவரே இந்திய எல்லைக்குள் சீனா ஊடுறுவவில்லை என்கிறார். எல்லைக்குள் சீனா ஊடுறுவியதாக அறிக்கை வெளியிட்ட பாதுகாப்புத் துறை அமைச்சகம் தற்போது அதை நீக்கியுள்ளது” எனத் தெரிவித்தார்.