புதுச்சேரி காங்கிரஸ் கூட்டணி கட்சிகளான திமுக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஆகியவற்றின் நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம் முதலியார் பேட்டையில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சலீம் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், காங்கிரஸ் கட்சித் தலைவர் ஏ.வி. சுப்பிரமணியம் கலந்து கொண்டு பேசினார்.
பின்னர் கூட்டத்தில், கரோனா பேரிடர் நிவாரண நிதியை புதுச்சேரிக்கு வழங்காமல் காலம் தாழ்த்தி வரும் மத்திய பாஜக அரசின் பழிவாங்கும் போக்கைக் கண்டித்து நாளை 24 ஆம் தேதி கடற்கரை சாலை காந்தி சிலை அருகே கருப்பு பேட்ஜ் அணிந்து தர்ணா போராட்டம் நடத்துவது என முடிவெடுக்கப்பட்டது.