பிகார் மாநிலம் பாட்னாவில் 'பிகார் கி பாத்' என்ற தேர்தல் பரப்புரை நிகழ்வில் பிரபல தேர்தல் யுக்தி வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் கருத்து திருட்டு செய்ததாகக் கூறி, பிகார் மாநிலம் மோதிஹரியைச் சேர்ந்த காங்கிரஸ் பிரமுகர் சாஷ்வத் கவுதம் என்பவர் பத்லிபுத்ரா காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
'கருத்து திருட்டு வழக்கில் பிரசாந்த் கிஷோர் மன்னிப்புக் கேட்டால் அவரை மன்னிப்பேன்'
பாட்னா: பிகார் கி பாத் கருத்து திருட்டு வழக்கில் பிரசாந்த் கிஷோர் மன்னிப்புக் கேட்டால் அவரை மன்னிப்பேன், அவ்வாறு கேட்காவிட்டால் அதனை நீதிமன்றம்தான் தீர்மானிக்கும் எனக் காங்கிரஸ் பிரமுகர் சாஷ்வத் கவுதம் தெரிவித்துள்ளார்.
kishore-of-plagiarism
அதனடிப்படையில் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்துவரும் நிலையில், புகார் அளித்த சாஷ்வத் கவுதம், பாட்னாவில் செய்தியாளர் கூட்டத்தில், "பிகார் இளைஞர்களின் தரவை பிரசாந்த் கிஷோர் திருடுகிறார், இருந்தாலும் பிரசாந்த் கிஷோர் இது குறித்து மன்னிப்புக் கேட்டால் அவரை மன்னிப்பேன். அவ்வாறு செய்யாவிட்டால், என்ன செய்ய வேண்டும் என்பதை நீதிமன்றம்தான் தீர்மானிக்கும்" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க:பிரஷாந்த் கிஷோர் மீது பாய்ந்த '420' வழக்கு