புதுச்சேரி யூனியன் பிரதேசம் காரைக்கால் கிராம்புதோட்டம் பகுதியைச் சேர்ந்த சுரேஷ் என்பவரது மனைவி வசந்தகோகிலா. இவர், தனது மகளுடன் நேற்று (டிசம்பர் 23) வெளியே சென்றுவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது, அவர்களை இருசக்கர வாகனத்தில் பின் தொடர்ந்த அடையாளம் தெரியாத ஒருவர், வசந்தகோகிலா அணிந்திருந்த ரூ. 4 லட்சம் மதிப்புள்ள 11 சவரன் தாலி செயினை பறித்துச் சென்றார்.
இதையடுத்து, காரைக்கால் நகர காவல் நிலையத்தில் வசந்தகோகிலா புகார் அளித்தனர். அதன் பேரில் வழக்குப் பதிவு செய்த காவலர்கள், தீவிர விசாரணையில் ஈடுபட்டுனர். அப்போது, திருட்டில் ஈடுபட்டவர் பயன்படுத்திய இருசக்கர வாகனத்தின் அடையாளங்களை வைத்து காரைக்கால் கடற்கரையில் சந்தேகத்தின் பேரில் ஒருவரை பிடித்து விசாரணை மேற்கொண்டதில், தாலி செயினை திருடியவர் என்பது தெரியவந்தது.