தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

ஆந்திரபிரதேசத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்படும்: ராகுல் காந்தி வாக்குறுதி...! - special status to AP

விஜயவாடா: காங்கிரஸ் மத்தியில் ஆட்சி அமைத்தால் ஆந்திரபிரதேசத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தேர்தல் வாக்குறுதியளித்துள்ளார்.

ராகுல் காந்தி

By

Published : Mar 31, 2019, 9:13 PM IST

நாடாளுமன்றத் தேர்தல் இந்தியாவில் ஏழு கட்டங்களாக நடைபெறவிருக்கின்றது. தேர்தல் பணிகளும், பரப்புரைகளும் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் கடந்த ஞாயிறு அன்று நடைபெற்ற காங்கிரஸ் பேரணியில் கலந்து கொண்டு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பரப்புரையில் ஈடுபட்டார்.

அப்போது அவர் பேசியதாவது:

காங்கிரஸ் மத்தியில் ஆட்சி அமைத்தால் ஆந்திரபிரதேசத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்படும். வறுமைக்கு எதிராக சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் நடத்தப்படும், மேலும் குறை ந்தபட்ச வருமான திட்டத்தின் மூலம் ஏழைகளின் வாழ்க்கைத்தரம் உயர்த்தப்படும்.

பின்னர், முன்பு காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி வறுமையை ஒழிப்பதற்கான திட்டங்களை உருவாக்கியது. ஆனால் பிரதமர் மோடி அனைத்தையும் கலைத்துவிட்டார் என குற்றஞ்சாட்டினார்.

ABOUT THE AUTHOR

...view details