தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

‘பாஜக ஆட்சியில் இருக்கக் கூடாது... இதுதான் காங்கிரஸின் எண்ணம்’ - பாஜக சாடல்

டெல்லி : காங்கிரஸ் தலைவர்கள் ஊழல்வாதிகளாக உள்ளதால் எங்களை ஆட்சி அமைக்கவிடக் கூடாது என்பதே அவர்களின் குறிக்கோளாக உள்ளது என பாஜக செய்தித்தொடர்பாளர் சுதேஷ் வர்மா விமர்சித்துள்ளார்.

BJP spokesperson, பாஜக செய்தித் தொடர்பாளர்
BJP spokesperson

By

Published : Feb 13, 2020, 2:33 PM IST

டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி வெற்றிபெற்றது குறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் பா.சிதம்பரம் உற்சாகமாக மகிழ்ச்சியை வெளிப்படுத்தியது குறித்து ஈடிவி பாரத்திடம் பேசிய பாஜக செய்தித் தொடர்பாளர் சுதேஷ் வர்மா, "பாஜகவை தடுத்து நிறுத்த வேண்டும் என்பதே காங்கிரஸ் கட்சியின் குறிக்கோளாக உள்ளது.

தன் கட்சி படுதோல்வியடைந்ததைத் தெரிந்தும் ஒருவர் ஏன் மகிழ்ச்சியை வெளிபடுத்த வேண்டும்? அவருக்கு எதிராக வழக்குகள் இருப்பதே இதற்கு காரணம். இந்திய நாட்டை சுரண்டியது அவர்கள்தான் (காங்கிரஸ்காரர்கள்). ராகுல் காந்தி, ராபர்ட் வதேரா உள்ளிட்ட பலர் மீது வழக்குகள் உள்ளன. அதனால்தான் பாஜகவை ஆட்சி அமைக்கவிடக் கூடாது என அவர்கள் எண்ணுகிறார்கள்" என விமர்சித்தார்.

குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக நாடு முழுவதும் நடைபெற்று வரும் போராட்டங்கள் குறித்து கேட்பொழுது, "இந்த விவகாரத்தை அரசியலாக்கக் கூடாது. இந்தச் சட்டம் யாருக்கும் எதிரானது அல்ல. உங்களுக்கு இதுபற்றி தெரியும் என்றால் விவாதியுங்கள். இல்லையேல் விட்டுவிடுங்கள். நன்கு ஆராய்ந்த பிறகே இந்தச் சட்டத்தை அரசு கொண்டு வந்தது" என விளக்கமளித்தார்.

டெல்லி தேர்தலில் பாஜக தேல்வியடைந்ததற்கு யார் பொறுப்பேற்கப் போகிறார்கள் என்ற கேள்விக்கு, "வெற்றியோ, தோல்வியோ நாங்கள் அனைவரும் அதற்கு கூட்டமாகப் பொறுப்பேற்றுக்கொள்கிறோம்" என்றார்.

இதையும் படிங்க :'கொரோனா பாதிப்பு இந்தியாவின் ஏற்றுமதிக்குச் சாதகமாய் அமைந்துள்ளது' - பொருளதார ஆலோசகர் சுப்பிரமணியன்

ABOUT THE AUTHOR

...view details