தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

#ViralVideo 'ஹரியானாவில் காங்கிரஸ் ஏன் இப்படி இருக்கிறது?' - கடுப்பான அகமது படேலின் வீடியோ - ஹரியானா சட்டப்பேரவை தேர்தல்

டெல்லி: ஹரியானாவில் நடைபெறவுள்ள சட்டப்பேரவை தேர்தலுக்குக்கான வேட்பாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டது குறித்து அகமது படேலும் பூபேந்தர் சிங் ஹூடாவும் விவாதிக்கும் வீடியோ வைரலாகியுள்ளது.

Hooda and Ahmed Patel

By

Published : Oct 3, 2019, 6:59 PM IST

தற்போது பாஜக ஆட்சியிலுள்ள ஹரியானா மாநிலத்தின் சட்டப்பேரவைத் தேர்தல் இம்மாத இறுதியில் நடைபெறவுள்ளது. இதில் போட்டியிடும் வேட்பாளர்களைத் தேர்ந்தெடுப்பதில் காங்கிரசும் பாஜகவும் மும்மரமாக ஈடுபட்டு வருகிறது.

இந்நிலையில், காங்கிரஸ் இடைக்காலத் தலைவரும் சோனியா காந்தியின் நம்பிக்கைக்குரிய நபரான அகமது படேலும், ஹரியானாவின் முன்னாள் முதலமைச்சருமான பூபேந்தர் சிங் ஹூடாவும் நாடாளுமன்றத்திற்கு வெளியே வாக்குவாதத்தில் ஈடுபட்டிருந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாக பரவிவருகிறது.

38 விநாடிகள் ஓடும் இந்த வீடியோவில், ஹரியானா சட்டப்பேரவைத் தேர்தலுக்கான இடங்கள் எப்படி வழங்கப்பட்டது என்றும் ஹரியானாவில் காங்கிரஸ் ஏன் இப்படியொரு நிலையில் இருக்கிறது என்றும் அகமத் படேல் கோபமாகக் கேட்கிறார்.

மேலும், "சுர்ஜேவாலா சமூகத்திற்கு எத்தனை இடம் வழங்கப்பட்டது?" என்று அகமத் படேல் இந்தியில் கேட்க, அதற்கு பூபேந்தர் சிங் ஹூடா 'நான்கு' என்று பதில் அளிக்கிறார்.

அகமது படேலும் பூபேந்தர் சிங் ஹூடாவும் விவாதிக்கும் வீடியோ

முன்னதாக ஹரியானாவில் நடைபெறவிருக்கும் சட்டப்பேரவை தேர்தலில் வேட்பாளர்களைத் தேர்ந்தெடுத்ததில் ஊழல் நடந்துள்ளதாகக் குற்றம்சாட்டி முன்னாள் ஹரியானாவின் தலைவர் அசோக் தன்வார், சோனியா காந்தியின் வீட்டின் முன் போராட்டம் நடத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்கலாமே: சூடுபிடிக்கும் தேர்தல் களம்: ஹரியானா தேர்தல்களம் பற்றி ஓர் பார்வை!

ABOUT THE AUTHOR

...view details