காங்கிரஸ் கட்சி, ஆட்சி செய்த மாநிலங்களில் தொடர்ந்து அக்கட்சி எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்வதும், அதையடுத்து பாஜக ஆட்சிக்கு வருவதும் தொடர்கதையாகி வருகிறது. கர்நாடகாவைத் தொடர்ந்து மத்தியப் பிரதேசத்திலும் பாஜக ஆட்சியை கைப்பற்றியது.
இந்நிலையில், ராஜஸ்தானில் அசோக் கெலாட் - சச்சின் பைலட் இடையே ஏற்பட்டுள்ள மோதலால் அம்மாநில அரசியலில் குழப்பம் நிலவி வருகிறது. இதனிடையே ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட் தனது பெரும்பான்மையை நிரூபிக்க தீவிரமாக முயன்று வரும் நிலையில், அம்மாநில ஆளுநர் கல்ராஜ் மிஸ்ரா முதலமைச்சரின் கோரிக்கையை ஏற்காமல், சட்டப்பேரவையைக் கூட்ட எந்தக் காரணமும் இல்லை என கூறினார். இதனால் ஆளுநர் மாளிகை முன்பாக அசோக் கெலாட் ஆதரவு எம்எல்ஏக்கள் 5 மணி நேரம் போராட்டத்தில் ஈடுபட்டனர்.