இந்தியாவில் கோவிட்-19 பரவலைக் கட்டுப்படுத்த மே 3 வரை அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு, பின் மே 17 வரை நீடிக்கப்பட்டது. இருப்பினும் வைரஸ் பரவல் இந்தியாவில் தொடர்ந்து அதிகரித்துத்தான் வருகிறது.
இந்நிலையில் இன்று காங்கிரஸ் ஆளும் மாநிலங்களின் முதலமைச்சர்களுடன் அக்கட்சியின் தலைவர் சோனியா காந்தி ஆலோசனையில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர், "மே 17ஆம் தேதிக்குப் பின் என்ன நடக்கும்? எதை வைத்து ஊரடங்கை மேலும் நீட்டிக்கலாமா வேண்டாமா என்று மத்திய அரசு முடிவு செய்யும். ஊரடங்கு நீக்கப்படும்போது பின்பற்ற வேண்டியவை குறித்து என்ன திட்டங்களை அரசு வைத்துள்ளது" என்று கேள்வி எழுப்பினார்.
முன்னாள் பிரதமரும் காங்கிரஸ் கட்சி மூத்த தலைவர்களில் ஒருவருமான மன்மோகன் சிங், "ஊரடங்கு 3.0க்கு பின் என்ன நடக்கும் என்பதை அரசு விளக்க வேண்டும்" என்றார்.