தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

15 எம்எல்ஏக்களை தக்கவைக்க ரிசார்ட்டில் தங்கவைத்த காங்கிரஸ்! - 15 எம்.எல்.ஏக்களை ரிசார்ட்டில் தங்க வைத்து காங்கிரஸ்

காந்திநகர்: மாநிலங்களவை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், குஜராத்தில் காங்கிரஸ் கட்சி  தனது 15 எம்எல்ஏக்களை தக்க வைக்கும் விதமாக ரிசார்ட்டில் தங்கவைத்துள்ளது.

Cong moves 15 Gujarat MLAs to Anand resort ahead of RS polls
Cong moves 15 Gujarat MLAs to Anand resort ahead of RS polls

By

Published : Jun 7, 2020, 7:59 PM IST

மாநிலங்களவை தேர்தல் வரும் ஜூன் 19ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்த நிலையில், குஜராத்தில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மூன்று சட்டப்பேரவை உறுப்பினர்கள் ராஜினாமா செய்தனர். இதைத் தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக காங்கிரஸ் கட்சி தனது 15 சட்டப்பேரவை உறுப்பினர்களைத் தக்கவைக்கும் விதமாக ஆனந்த் அருகேயுள்ள ரிசார்ட்டில் தங்க வைத்துள்ளது.

இவர்களை ரிசார்ட்டுக்கு மாற்றும் பொறுப்பு அம்மாநில காங்கிரஸ் தலைவர் சரத் சிங் சோலாங்கியிடம் ஒப்படைக்கப்பட்டது. முன்னதாக, காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சட்டப்பேரவை உறுப்பினர்கள்‌ சிலர் ராஜஸ்தானில் உள்ள வைல்ட்வின்ட் ரிசார்ட்டுக்கு மாற்றப்பட்டனர்.

ABOUT THE AUTHOR

...view details