தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

'நான் குடியரசு தலைவரான போதே, காங்., தலைமை அரசியல் கவனத்தை இழந்துவிட்டது' - பிரணாப் முகர்ஜி

தான் குடியரசு தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட போதிலிருந்தே காங்கிரஸ் தலைமை அரசியல் ரீதியாக தனது கவனத்தை தவறவிட்டது என்றும், மன்மோகன் சிங் தனது கூட்டணி அரசை காப்பற்றுவதிலேயே அதிக கவனம் செலுத்தினார் என்றும் முன்னாள் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி தனது 'தி பிரெஸிடென்சியல் இயர்ஸ்' என்ற புத்தகத்தில் கூறியுள்ளார்.

Pranab Mukherjee
Pranab Mukherjee

By

Published : Dec 12, 2020, 1:08 PM IST

மறைந்த முன்னாள் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி உயிரிழப்பதற்கு முன்னர், தனது அனுபவங்களை தொகுத்து 'தி பிரெஸிடென்சியல் இயர்ஸ்' ("The Presidential Years") என்ற புத்தகத்தை எழுதியிருந்தார். இந்தப் புத்ததம் அடுத்தாண்டு ஜனவரி மாதம் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தான் குடியரசு தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட போதிலிருந்தே காங்கிரஸ் தலைமை அரசியல் ரீதியாக தனது கவனத்தை தவறவிட்டு விட்டது என்றும், மன்மோகன் சிங் தனது கூட்டணி அரசை காப்பாற்றுவதிலேயே அதிக கவனம் செலுத்தினார் என்றும் பிரணாப் முகர்ஜி தனது புத்தகத்தில் கூறியுள்ளார்.

காங்கிரஸ் தலைமைக்கு எதிராக கபில் சிபல் உள்ளிட்ட 23 மூத்த தலைவர்கள் போர்கொடி தூக்கியுள்ள நிலையில், பிரணாப் முகர்ஜியின் இந்தப் புத்தகம் குறித்த தகவல் வெளியாகி இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

'குடியரசு தலைவரானபோத கவனம் இழக்க தொடங்கிவிட்டது'

முன்னாள் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி தனது புத்தகத்தில்,"2004ஆம் ஆண்டு நான் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தால் 2014ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சிக்கு ஏற்பட்ட தோல்வியை தவிர்திருக்கலாம் என்று கட்சியின் மூத்த தலைவர்கள் பலரும் கருதினர். ஆனால், எனக்கு இந்தக் கருத்தின் உடன்பாடில்லை.

நான் குடியரசு தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட போதிலிருந்தே காங்கிரஸ் தலைமை, அரசியல் ரீதியாக தனது கவனத்தை தவறவிட தொடங்கிவிட்டது என்பதே எனது கருத்து. சோனியா காந்தியால் உள்கட்சி விவகாரங்களை கையாள முடியாமல் போனது.

மன்மோகன் சிங்கும் நீண்ட நாள்களாக சபைக்கு வராததால், மற்ற நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் அவருக்கும் இடையே தொடர்பு இல்லாமல் போனது" என்று அதில் கூறப்பட்டுள்ளது.

மன்மோகன் சிங்கை டிக் அடித்த சோனியா காந்தி

கடந்த 2004ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்ற போது, பிரதமர் பதவிக்கு சோனியா காந்தியின் பெயர் பரிசீலிக்கப்பட்டது. இருப்பினும், அப்போது இந்தியர் அல்லாத ஒருவரை பிரதமராகாக்கக் கூடாது என்று பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் மிகக் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தன. இதனால் அவர் பிரதமராக பதவியேற்கவில்லை.

அப்போது, அக்கட்சியிலிருந்த பலராலும் பிரணாப் முகர்ஜியே பிரதமராக பதிவியேற்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. இருப்பினும், அந்த சமயத்தில் யாரும் எதிர்பாராதவிதமாக மன்மோகன் சிங் பிரதமராக அறிவிக்கப்பட்டார். 2014ஆம் ஆண்டு வரை சுமார் 10 ஆண்டுகள் அவரே பிரதமராக தொடர்ந்தார். மத்திய அமைச்சராக பணியாற்றி வந்த பிரணாப் முகர்ஜி, கடந்த 2012ஆம் ஆண்டு குடியரசு தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

மன்மோகன் சிங்கும் நரேந்திர மோடியும்

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் இன்னாள் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோரை ஒப்பிட்டு பிராணப் முகர்ஜி தனது புத்தகத்தில், "அரசு நிர்வாகத்தை வழிநடத்தும் தார்மீக உரிமை பிரதமருக்கே இருப்பதாக நான் கருதுகிறேன். நாட்டின் ஒட்டுமொத்த செயல்பாடும் பிரமதர் மற்றும் அவரது நிர்வாகத்தின் செயல்பாடுகளின் அடிப்படையிலேயே இருக்கும்.

மன்மோகன் சிங் தனது கூட்டணி ஆட்சியை காப்பதிலேயே பெரும்பாலும் ஆர்வமாக இருந்தார், இது அரசு நிர்வாகத்தை பாதித்தது. நரேந்திர மோடி தனது முதல் பதவிக்காலத்தில் ஒரு சர்வாதிகார பாணியிலான ஆட்சியையே நடத்தினார். இது அரசு, நாடாளுமன்றம், நீதித்துறை ஆகியவைகள் இடையே கசப்பான உறவை ஏற்படுத்தியது.

அவரது அரசின் இரண்டாவது பதவிக்காலத்தில் இதுபோன்ற விஷயங்களில் நல்ல புரிதல் இருக்குமா என்பதை காலம் தான் பதில் சொல்லும்" என்று கூறியுள்ளார்.

பிரணாப் முகர்ஜி நாட்டின் 13ஆவது குடியரசு தலைவராக 2012ஆம் ஆண்டு முதல் 2017ஆம் ஆண்டு வரை பொறுப்பில் இருந்தார். அதன் பின்னர் தீவிர அரசியில் இருந்து ஒதுங்கியிருந்த அவர், கரோனாவால் ஏற்பட்ட உடல்நிலை பாதிப்பு காரணமாக இந்தாண்டு ஜூலை 31ஆம் தேதி தனது 84ஆவது வயதில் காலமானார்.

இதையும் படிங்க: காங்கிரஸ் பலவீனமாக உள்ளதால் எதிர்க்கட்சிகள் ஒன்றிணைய வேண்டும் - சிவசேனா

ABOUT THE AUTHOR

...view details