தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

மத உணர்வுகளைப் புண்படுத்தியதாக காங்கிரஸ் தலைவர் கைது - Haryana latest news

சண்டிகர்: இந்து மத உணர்வுகளைப் புண்படுத்தும் வகையில் ட்வீட் செய்த காங்கிரஸ் தலைவர் பங்கஜ் புனியா கைது செய்யப்பட்டுள்ளார்.

Congress leader tweet objecting Hindu sentiments
Congress leader tweet objecting Hindu sentiments

By

Published : May 21, 2020, 1:10 PM IST

உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்தை விமர்சித்து காங்கிரஸ் கட்சியின் ஹரியானா மாநில தலைவர் பங்கஜ் புனியா, தனது ட்விட்டர் பக்கத்தில் ட்வீட் செய்திருந்தார். அந்தப் பதிவில், இந்துக்களையும் இந்து மத உணர்வுகளையும் கடுமையாக விமர்சித்து கருத்து தெரிவித்திருந்தார். இணையத்தில் பலரும் பங்கஜ் புனியாவின் இந்தப் பதிவுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து, உடனடியாக அவர் அந்த ட்வீட்டை நீக்கிவிட்டார்.

இது குறித்து பங்கஜ் புனியாவுக்கு எதிராக லக்னோ காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து லக்னோ காவல் துறையினர் புதன்கிழமை இரவு பங்கஜ் புனியாவை ஹரியானாவில் கைது செய்தனர். அதைத் தொடர்ந்து, பங்கஜ் புனியா இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார். அதேபோல காசியாபாத் காவல் நிலையத்திலும் அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்து மத உணர்வுகளைப் புண்படுத்தும் வகையில் ட்வீட் செய்த பங்கஜ் புனியாவின் ட்விட்டர் கணக்கை முடக்க வேண்டும் என்றும் பலரும் இணையத்தில் விமர்சித்துவருகின்றனர்.

இதையும் படிங்க: ’பயங்கரவாதத்தை ஆதரிக்கும் நாடுகளை தனிமைப்படுத்த வேண்டும்’

ABOUT THE AUTHOR

...view details