கடந்த ஏழு மாதங்களாக வீட்டுக் காவலில் அடைக்கப்பட்டிருந்த ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் ஃபருக் அப்துல்லா நேற்று மத்திய அரசால் விடுதலை செய்யப்பட்டார். இதையடுத்து, காங்கிரஸ் மூத்தத் தலைவர் குலாம் நபி ஆசாத் இன்று அவரைச் சந்தித்துப் பேசினார். ஸ்ரீநகரில் உள்ள அப்துல்லாவின் வீட்டில் இந்தச் சந்திப்பு நடைபெற்றது.
இதனைத் தொடர்ந்து, ஆசாத் செய்தியாளர்களிடம் பேசுகையில், "நாட்டிற்குச் சுதந்திரம் கிடைத்த பிறகு, ஜம்மு காஷ்மீர் மாநிலத்துடன் மற்ற மாநிலங்களை இணைக்க தேவை ஏற்படவில்லை. ஜம்மு காஷ்மீர் பெரிய பரப்பளவு கொண்டதால் அதற்கு முழு மாநில அந்தஸ்து வழங்க வேண்டும்" என்றார்.