உத்தரபிரதேசம் மாநிலம், அமேதி தொகுதியில் பாஜக சார்பில் ஸ்மிருதி இரானி போட்டியிடுகிறார். இவர் இன்று அந்த தொகுதிக்குட்பட்ட பகுதியில் பரப்புரை மேற்கொண்டார். இதைதொடர்ந்து அவர் செய்தியாளர்களை சந்தித்து கூறியதாவது, அமேதி தொகுதிக்கு நான் எத்தனை முறை பரப்புரைக்கு வருகிறேன் என எண்ணும் பிரியங்கா காந்தி, 15 ஆண்டுகளாக இந்த தொகுதியில் மக்களவை உறுப்பினராக இருக்கும் ராகுல் காந்தி எங்கே போனார் என்பது குறித்து விளக்கம் அளிக்க முடியுமா என கேள்வி எழுப்பினர். ஆனாலும் இந்த தொகுதியில் நான் எத்தனை முறை பரப்புரைக்கு வருகிறேன் என அவர் எண்ணுவது மகிழ்ச்சியளிக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.
15 ஆண்டுகளாக எங்கே போனார் அமேதி தொகுதியின் மக்களவை உறுப்பினர்? - ஸ்மிருதி இரானி கேள்வி - Member is missing for 15 years
உத்தரப்பிரதேசம்: அமேதி தொகுதிக்கு நான் எத்தனை முறை பரப்புரைக்கு வருகிறேன் என எண்ணும் பிரியங்கா காந்தி, 15 ஆண்டுகளாக இந்த தொகுதியில் மக்களவை உறுப்பினராக இருக்கும் ராகுல் காந்தி எங்கே போனார் என்று கூற முடியுமா என பாஜக வேட்பாளர் ஸ்மிருதி இரானி கேள்வி எழுப்பியுள்ளார்.
ஸ்மிருதி இராணி
அமேதி தொகுதிக்கு உட்பட்ட புராப் துவாரா கிராமத்தில் அவர் பரப்புரை மேற்கொண்ட போது அங்குள்ள விளைநிலத்தில் திடீரென தீவிபத்து ஏற்பட்டது. இதை அறிந்த அவர் அதேபகுதியில் இருந்த அடிகுழாய் மூலம் தண்ணீர் அடித்து அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டது கிராம மக்களிடையே வியப்பை ஏற்படுத்தியுள்ளது.