தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

வேலைவாய்ப்பு குறித்த மத்திய நிதி அமைச்சகத்தின் உத்தரவை திரும்பப்பெற வேண்டும்! - சர்வதேச தொழிலாளர் அமைப்பின் சமீபத்திய தரவு

டெல்லி : மத்திய அரசில் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்க நிதி அமைச்சகம் விதித்த தடை உத்தரவை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியுள்ளது.

வேலைவாய்ப்பு குறித்த மத்திய நிதி அமைச்சகத்தின் உத்தரவை திரும்பப்பெற வேண்டும்!
வேலைவாய்ப்பு குறித்த மத்திய நிதி அமைச்சகத்தின் உத்தரவை திரும்பப்பெற வேண்டும்!

By

Published : Sep 5, 2020, 7:07 PM IST

மத்திய அரசின் அலுவலகங்களில் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்க நிதி அமைச்சகம் அதிகாரப்பூர்வமான தடையை விதிப்பதாக ஆணை வெளியிட்டுள்ளது.

இது தொடர்பாக நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பேசிய காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ராஜீவ் சுக்லா, "​​இந்தியாவின் பொருளாதாரம் என்றும் இல்லாத அளவுக்கு வீழ்ச்சியடைந்துள்ளது. தற்போதைய நிலையானது நாட்டை 45 ஆண்டு காலம் பின்நோக்கி சென்றுள்ளது. உலகம் முழுவதும் தங்கள் நாட்டு மக்களுக்கு தேவானவற்றை வழங்க அரசு உறுதுணை நிற்கின்றது.

நாட்டு மக்களின் வேலைவாய்ப்பை காப்பாற்ற முயற்சியாக தனியார் நிறுவனங்களுக்கு அழுத்தம் தருகிறது. ஆனால், இந்திய அரசு தனது சொந்த அலுவலகங்களில் இருக்கும் வேலைவாய்ப்புகளை முடக்குகிறது. இந்த நாட்டின் இளைஞர்கள் வாழ்வாதாரத்தை காக்கா எங்கே போவார்கள்?.

சென்டர் ஃபார் மானிட்டரிங் இந்திய பொருளாதாரத்தின் (சி.எம்.ஐ.இ) தரவின் அடிப்படையில் பார்த்தால் நாடு முழுவதும் 15 முதல் 29 வயதுக்குட்பட்டவர்களில் 17.8 விழுக்காட்டினர் வேலை இழந்துள்ளனர். அதாவது 1.89 கோடி பேர் வேலை இழந்துள்ளனர்.

2014ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலின் போது, ​​இந்த நாட்டில் உள்ள இளைஞர்களுக்கு ஆண்டுக்கு இரண்டு கோடி வேலைகளை வழங்குவதாக பிரதமர் மோடி உறுதியளித்தார். ஆனால் இன்று 2 கோடிக்கும் அதிகமானோர் வேலை இழந்துவிட்டனர். சர்வதேச தொழிலாளர் அமைப்பின் சமீபத்திய தரவுகளின்படி, இந்தியாவில் 40 கோடி மக்கள் வறுமைக் கோட்டுக்குக் கீழே சென்றுள்ளனர்.

இந்த உத்தரவை உடனடியாக திரும்பப் பெறுமாறு மத்திய அரசை நாங்கள் வலியுறுத்துகிறோம். தற்போதைய நிலைமையை நிர்வகிக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படாவிட்டால், நமது பொருளாதாரம் மோசமடையும்" என்று அவர் கூறினார்.

ABOUT THE AUTHOR

...view details