கேரள மாநில எதிர்க்கட்சி தலைவரான காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ரமேஷ் சென்னிதலா இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறுகையில், "ரகசிய ஹெலிகாப்டர் மூலமாக கேளர மாநில தலைமைச் செயலாளர் டாம் ஜான்சன் மற்றும் கேரள காவல்துறை தலைவர் லோக்நாத் மெஹ்ரா அந்த பகுதிக்கு ரகசிய பயணம் செய்தது எதற்காக என்பதை மக்கள் அறிய வேண்டும். வனத்துறை சிறப்புச் செயலாளர் மணல் அள்ளுவதற்கு தடைவித்துள்ளார். அப்படியானால், பொதுப்பணித் துறையைச் சேர்ந்தவர்களுக்கு யார் மணல் அள்ளுவதற்கு அனுமதி வழங்கியது.
இந்த ஊழலின் மூலம் பயன் அடைபவர்கள் யார்யாரென நாம் அறிய வேண்டும். நமக்கு கிடைத்த தகவலின் அடிப்படையின் மூலமாக அங்கே இரண்டு தனியார் நிறுவனங்கள் இந்த ஊழலின் மூலம் பயனடைவார்கள் என அறிய முடிகிறது. கடந்த 2014ஆம் ஆண்டு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின்படி ஆற்றிலிருந்து மணல் அள்ளுவதற்கு பொதுப்பணித் துறையிடமிருந்தும், வனத்துறையிடமிருந்தும், மணல் அள்ளும் துறையினரிடமும் முறையான அனுமதியை பெறவேண்டும் என்ற விதி இருக்கிறது.