இது குறித்து காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் கே.சி. வேணுகோபால் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “மத்தியில் ஆளும் பாஜக அரசு 2014ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்ததிலிருந்து சமூக, பொருளாதார முன்னேற்றத்தை பின்னோக்கித்தான் எடுத்துச் செல்கிறது. அதிலும் கடந்த மூன்று மாதங்களாக கரோனா பெருந்தொற்றை கையாண்டது அவர்களின் திறனற்ற முடிவை குறிக்கிறது.
ஆளும் அரசின் தோல்வியால் நாட்டில் உள்ள உழைக்கும் மக்களும், இளைஞர்களும் வேலையின்மையால் திண்டாடிவருகின்றனர். அதுமட்டுமின்றி அமெரிக்காவில் எச் -1 பி விசாவை இடைநீக்கம் செய்ததையடுத்து, சுமார் இரண்டு லட்சம் இந்தியர்களை நாடு திரும்ப வைக்கும்” என்றார்.