தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

மகாராஷ்டிரா கூட்டணியில் குழப்பம்? - மகாராஷ்டிரா கூட்டணியில் குழப்பம்

டெல்லி: இந்திரா காந்தி குறித்து சர்ச்சையான கருத்து தெரிவித்த சிவசேனா மூத்தத் தலைவர், தனது கருத்தை திரும்பப்பெற்ற நிலையிலும், மகாராஷ்டிரா கூட்டணியில் தொடர்ந்து குழப்பம் நீடித்துவருகிறது.

Maharashtra
Maharashtra

By

Published : Jan 16, 2020, 3:33 PM IST

மகாராஷ்டிரா மாநிலம் பூனேவில் விருது வழங்கும் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட சிவசேனா மூத்தத் தலைவர் சஞ்சய் ராவத் செய்தி நிறுவனம் ஒன்றிற்கு பேட்டி அளித்தார். அப்போது அவர், "நிழல் உலக தாதாவான ஹாஜி மஸ்தான் மந்திராலயாவுக்கு சென்றால் முழு அமைச்சகமே அவரை சந்திக்கச் செல்லும். கரிம் லாலாவை இந்திரா காந்தி சந்தித்து பேசியுள்ளார்" என தெரிவித்தார்.

நிழல் உலக தாதாவை இந்திரா காந்தி சந்தித்து பேசினார் என சிவசேனா மூத்தத் தலைவர் பேசியது பெரும் சர்ச்சையை கிளப்பி மகாராஷ்டிரா கூட்டணியில் விரிசலை உண்டாக்கியது. இதையடுத்து அவர் தனது கருத்துக்களை திரும்ப பெற வேண்டும் என காங்கிரஸ் தலைவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

இதுகுறித்து சஞ்சய் ராவத், காங்கிரஸ் கட்சியில் உள்ள நண்பர்கள் இதனால் காயப்பட வேண்டாம். இந்திரா காந்தி குறித்து நான் கூறிய கருத்துக்களை திரும்பபெறுகிறேன் என தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: காஷ்மீர் விவகாரத்தில் இந்தியாவுக்கு வெற்றி - மண்ணைக் கவ்விய சீனா!

ABOUT THE AUTHOR

...view details