தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

ஜஸ்வந்த் சிங் மறைவு: தலைவர்கள் இரங்கல்!

By

Published : Sep 27, 2020, 11:03 AM IST

Updated : Sep 27, 2020, 12:10 PM IST

former Union Minister Jaswant Singh died
former Union Minister Jaswant Singh died

12:00 September 27

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இரங்கல்

ஜஸ்வந்த் சிங் மறைவுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், “முன்னாள் மத்திய அமைச்சரும் மூத்த அரசியல் தலைவருமான திரு. ஜஸ்வந்த் சிங் அவர்கள் மறைவுற்ற செய்தியறிந்து மிகுந்த துயருற்றேன். தி.மு.க. சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். இத்தகைய துயர்மிகு நேரத்தில் என்னுடைய எண்ணங்களில் அவரது குடும்பத்தினரையும், நண்பர்களையும் கொண்டுள்ளேன்” என்று பதிவிட்டுள்ளார்.

11:58 September 27

பிரதமர் நரேந்திர மோடி இரங்கல்

ஜஸ்வந்த் சிங் மறைவிற்கு பிரதமர் நரேந்திர மோடியின் இரங்கல் பதிவில், “நம் தேசத்திற்காக முழு விடாமுயற்சியுடன் பணியாற்றினார். முதலில் அவர் தேசத்திற்காக ஒரு ராணுவ வீரராகவும் பின்னர் நீண்ட கால அரசியல்வாதியாகவும் சேவையாற்றியவர். அடல் பிகாரி வாஜ்பாயின் அரசில் அவர் முக்கிய பதவிகளை வகித்துள்ளார். வெளியுறவுத் துறை, பாதுகாப்புத் துறை, நிதித் துறையில் சிறந்துவிளங்கினார். 

அவரது மறைவுக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். அரசியல், சமூக விவகாரங்களில் தனித்துவமான கண்ணோட்டத்திற்காக அவர் நினைவுக்கூரப்படுவார். பாஜகவை வலுப்படுத்த பெரும் பங்காற்றியவர். அவருடனான உரையாடல்களை நான் எப்போதும் நினைவில் கொள்வேன். அவருடயை ஆத்மா சாந்தியடைய வேண்டும்” என்றார்.

11:55 September 27

குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் இரங்கல்

முன்னாள் மத்திய அமைச்சர் ஜஸ்வந்த் சிங் மறைவிற்கு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “மூத்த ராணுவ வீரர், சிறந்த நாடாளுமன்ற உறுப்பினர், ஒப்பற்ற அறிவார்ந்த மனிதர் மறைந்துவிட்டார். பல கடினமான சவால்கள் அனைத்தையும் எதிர்கொள்ளும் திறன்கொண்டவர். அவரை இழந்து தவிக்கும் அவரது குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் எனது மனமார்ந்த இரங்கல்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது

10:45 September 27

அடல் பிகாரி வாஜ்பாய் ஆட்சி செய்த காலக்கட்டத்தில் பல முக்கிய துறைகளில் அமைச்சராகவும், பாஜக கட்சியை நிறுவிய தலைவர்களுள் ஒருவருமான ஜஸ்வந்த் சிங் காலமானார். அவருக்கு வயது 82.

வெளியுறவுத் துறை, பாதுகாப்புத் துறை, நிதித் துறை உள்ளிட்ட பல பதவிகளை இவர் வகித்தவர். இவர் பாஜக நிறுவனத் தலைவர்களில் ஒருவராக இருந்தார். தொடர்ந்து 30 ஆண்டுகளுக்கும் மேலாக எம்பியாக இருந்தவர்.

வாஜ்பாய் தலைமையிலான ஆட்சியில் 1996-ஆம் ஆண்டு முதல் 2004ஆம் ஆண்டு வரை இவர் முக்கிய பொறுப்புகளை வகித்துள்ளார். பாஜகவை வலுப்படுத்தியதில் இவருக்கு முக்கிய பங்குண்டு. பிரதமர் நரேந்திர மோடி பதவியேற்ற காலமான 2014இல், ஜஸ்வந்த் சிங் பாஜகவிலிருந்து வெளியேற்றப்பட்டார்.  

இவருக்கு அண்மை காலமாக உடல்நிலை சரியில்லாத காரணத்தால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தார். ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் இன்று மருத்துவமனையில் ஜஸ்வந்த் சிங் உயிர் பிரிந்தது. அவர் மறைவையொட்டி, பிரதமர் நரேந்திர மோடி, பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்பட அரசியல் கட்சி தலைவர்கள் பல தங்களின் இரங்கலை பதிவிட்டுவருகின்றனர்.

Last Updated : Sep 27, 2020, 12:10 PM IST

ABOUT THE AUTHOR

...view details