இந்தோர்: பல்வேறு வழக்குகளில் சிக்கி சிறையில் இருந்த நாம்தேவ் தாஸ் தியாகி எனும் கம்ப்யூட்டர் பாபா, பிணையில் வெளியானார்.
பிணையில் வெளியானார் கம்ப்யூட்டர் பாபா - கம்ப்யூட்டர் பாபா
கமல்நாத் ஆட்சி காலத்தில் பாபா அமைச்சரவையில் இடம்பெற்றிருந்தார். பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்து 28 தொகுதிகளில் இடைத்தேர்தல் நடைபெற்றபோது, ஜனநாயகத்தை காப்போம் என்ற முழக்கத்தோடு பாஜகவுக்கு எதிராக பாபா பரப்புரை மேற்கொண்டார்.
இந்தோர் சிறையில் இருந்து வெளிவந்த பாபா, இது உண்மைக்கு கிடைத்த வெற்றி என தெரிவித்தார். செய்தியாளர்களிடம் பேச மறுத்துவிட்டார். கம்ப்யூட்டர் பாபா மற்றும் அவரது ஆசிரமம் மீது பல்வேறு வழக்குகள் உள்ளன. சிவராஜ் சிங் சவுகான் ஆட்சிக்கு வந்ததும் அரசு அலுவலர்கள் பாபாவின் ஆசிரமத்தை இடித்தனர்.
கமல்நாத் (காங்கிரஸ்) ஆட்சி காலத்தில் பாபா அமைச்சரவையில் இடம்பெற்றிருந்தார். பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்து 28 தொகுதிகளில் இடைத்தேர்தல் நடைபெற்றபோது, ஜனநாயகத்தை காப்போம் என்ற முழக்கத்தோடு பாஜகவுக்கு எதிராக பாபா பரப்புரை மேற்கொண்டார். பாஜகவும் அவர் மீது பல குற்றச்சாட்டுகளை முன்வைத்தது. இடைத்தேர்தல் முடிந்த பின்பு அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. நவம்பர் 9ஆம் தேதி பாபா கைது செய்யப்பட்டார்.