குஜராத்திலிருந்து சிறப்பு ரயில் மூலம் பிகார் முசாபர்பூர் ரயில் நிலையத்திற்கு கடந்த மே 25ஆம் தேதி தன் குழந்தையுடன் வந்த பெண் ஒருவர் பசி, நீர்சத்து குறைவு காரணமாக உயிரிழந்தார். தாய் இறந்தது தெரியாமல் அந்த பச்சிளங்குழந்தை அவரை எழுப்பும் வீடியோ காட்சி சமூலவலைத்தளங்களில் வைரலானது. அது பார்போரை கண்கலங்க வைத்தது.
முசாபர்பூர் பெண் உயிரிழப்புக்கு எதிராக மனித உரிமை ஆணையத்தில் புகார் - nhrc
டெல்லி: பிகார் முசாபர்பூர் ரயில் நிலையத்தில் பெண் உயிரிழந்த சம்பவம் குறித்து வழக்கறிஞர் ஒருவர் பிகார் அரசிற்கு எதிராக தேசிய மனித உரிமை ஆணையத்தில் புகார் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் அச்சம்பவம் குறித்து அதிர்ச்சியடைந்ததாக கூறும் பதார் மமூத் என்ற வழக்கறிஞர், தேசிய மனித உரிமை ஆணையத்தில், ரயில்வே துறை மீதும் பிகார் அரசு மீதும் புகார் மனுவை தாக்கல் செய்தார். இந்த சம்பவம் நடந்த 25ஆம் தேதி முசாபர்பூர் ரயில் நிலையத்தில் அப்பெண் உயிரிழந்த நடைமேடையில் இருந்த சிசிடிவி காட்சி எடுக்கப்பட்டதாக குறிப்பிட்டவர், அந்த அநியாயமான சம்பவத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அதுமட்டும் இல்லாமல் உயிரிழந்த அந்த பெண் குடும்பத்திற்கு தக்க நஷ்டஈடு அளிக்க வேண்டும் என்றும் கூறியிருந்தார்.
இதையும் படிங்க:நரேந்திர மோடியின் ’லெட்டர்ஸ் டூ மதர்’ மின் புத்தகமாக வெளியீடு