தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

பிகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் மீது நீதிமன்றத்தில் புகார்

பாட்னா: பிகார் முதலமைச்சர் நிதிஷ் குமார், துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என நீதிமன்றத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

By

Published : Oct 17, 2019, 11:54 PM IST

Nithish Kumar

பிகாரை சேர்ந்த வழக்கறிஞர் ஒருவர் பாட்னா நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், மனிதனால் உருவாக்கப்பட்ட வெள்ளம், கால்வாய்கள் சரியாக பராமரிக்காத காரணத்தால் சிலர் உயிரிழந்துள்ளனர். மேலும் நூறு கோடிக்கு மேல் தனியார், அரசு சொத்துகள் சேதம் அடைந்துள்ளது என்று தெரிவித்து இருந்தார்.

அந்த புகாரில் மாநில முதலமைச்சர் நிதிஷ் குமார், துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி, அமைச்சர் சுரேஷ் குமார் சர்மா, பாட்னா மாநகராட்சி மேயர் சீதா சகு, ஆணையர் அமித் குமார் பாண்டே, நகர்புற வளர்ச்சித்துறை நிர்வாக இயக்குனர் ஆனந்த் கிஷோர் உள்ளிட்ட பலர் மீது இதையடுத்து இந்திய தண்டனை சட்டம் 302 (கொலை), குற்றத்துக்கு கூட்டுச்சதி (120பி) ஆகிய பிரிவுகளின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிகாரில் கடந்த 20 நாட்களாக பெய்த கனமழை, வெள்ளத்தில் சிக்கி 73 பேர் உயிரிழந்தனர் என்பது நினைவுக் கூரத்தக்கது.

இதையும் படிங்க: 'காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து நீக்கத்துக்கு எதிரானவர்களை வரலாறு கணக்கில் கொள்ளும்'

ABOUT THE AUTHOR

...view details