நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட வேளாண் மசோதாக்களுக்கு எதிராக பல விவசாய அமைப்புகளும் எதிர்க்கட்சிகளும் போராடி வருகின்றனர். இந்நிலையில், வேளாண் மசோதாக்களின் நன்மைகள் குறித்து பிரதமர் மோடி தனது டவிட்டர் பக்கத்தில் விளக்கம் அளித்திருந்தார்.
விவசாயிகளை பயங்கரவாதிகளுடன் ஒப்பிட்ட கங்கனா மீது வழக்குப்பதிவு
பெங்களூரு: விவசாயிகளை பயங்கரவாதிகளுடன் ஒப்பிட்டு ட்வீட் செய்ததைக் கண்டித்து நடிகை கங்கனா ரனாவத் மீது துமகுரு நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
அதனைத் தொடர்ந்து பிரதமரின் ட்விட்டர் பதிவை ரீட்வீட் செய்த நடிகை கங்கனா ரனாவத், அதில், ”பிரதமர் அவர்களே, ”தூங்குபவர்களை எழுப்பி விடலாம்; தூங்குவது போல் நடிப்பவர்களை எழுப்ப முடியாது” என்று ஒரு பழமொழி உண்டு. அதேபோல, ஒரு விஷயத்தை தவறாக புரிந்து கொண்டவர்களுக்கு விளக்கமளிப்பதன் மூலம் அவர்களின் எண்ணத்தை மாற்றிவிட முடியும். ஆனால், அனைத்தும் தெரிந்திருந்தும் வேண்டுமென்றே போராடுபவர்களை நம்மால் மாற்ற முடியாது. குடியுரிமை திருத்தச் சட்டத்தால் எந்தக் குடிமகனும் வெளியேற்றப்படாத நிலையில், அச்சட்டத்துக்கு எதிராக வன்முறை வெறியாட்டங்களில் தீவிரவாதிகள் ஈடுபட்டனர். அந்தத் தீவிரவாதிகள்தான் தற்போது வேளாண் மசோதாக்களுக்கு எதிராகவும் போராடி வருகின்றனர்” எனக் குறிப்பிட்டிருந்தார்.
கங்கனாவின் இந்த ட்வீட், பெரும் சர்ச்சைக்குள்ளான நிலையில், அவரைக் கண்டித்து கர்நாடகாவைச் சேர்ந்த வழக்கறிஞர் ரமேஷ் நாயக், தற்போது துமகுரு நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றைத் தொடர்ந்துள்ளார். முன்னதாக மின்னஞ்சல் மூலம் ரமேஷ் புகாரளித்தும் நடவடிக்கை எடுக்கப்படாத நிலையில், தற்போது அவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளதாகக் கூறப்படுகிறது.