தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

அஸ்ஸாம் தேசிய குடிமக்கள் பதிவேடு தயாரித்தவர் மீது குற்றஞ்சாட்டு - அஸாம் தேசிய குடிமக்கள் பதிவேடு தயாரித்தவர் மீது குற்றஞ்சாட்டு

கௌஹாத்தி: அஸ்ஸாம் தேசிய குடிமக்கள் பதிவேடுக்கு இறுதி வடிவம் கொடுத்தவர் மீது அஸ்ஸாம் மக்கள் தொண்டு நிறுவனத் தலைவர் குற்றஞ்சாட்டை முன்வைத்துள்ளார்.

Complaint against Hajela for 'tampering' with final NRC list
Complaint against Hajela for 'tampering' with final NRC listComplaint against Hajela for 'tampering' with final NRC list

By

Published : Feb 13, 2020, 11:04 PM IST

அஸ்ஸாம் மாநிலத்தைச் சேர்ந்த தன்னார்வ தொண்டு நிறுவனமான, ஏ.பி.டபிள்யூ தலைவர் அபிஜித் சர்மா இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, "அஸ்ஸாம் தேசிய குடிமக்கள் பதிவேட்டின் இறுதிவடிவம் உச்ச நீதிமன்றம் அறிவுறுத்திய வழிகாட்டலின்படி நடக்கவில்லை.

இதில் ஏராளமான குளறுபடிகள் நடந்துள்ளன. அஸ்ஸாம் தேசிய குடிமக்கள் பதிவேட்டின் முன்னாள் ஒருங்கிணைப்பாளர் பிரதீக் ஹஜிலா தனது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்துள்ளார். தனது பதவியைத் தவறாகப் பயன்படுத்தி இணைய குற்றத்தில் (சைபர் க்ரைம்) ஈடுபட்டுள்ளார்.

இந்த விவகாரம் தொடர்பாக நாங்கள் விசாரித்தோம். இரு வெளிநாட்டினருக்கு குடியுரிமை வழங்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. அதேநேரத்தில் உண்மையான அஸ்ஸாமியர் ஒருவருக்கு குடியுரிமை கிடைக்கவில்லை. ஆகவே, பிரதீக் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும்" எனக் கேட்டுக்கொண்டார்.

இதையும் படிங்க:அஸாம் தேசிய குடிமக்கள் பதிவேடு அரசு இணையத்தில் வெளியீடு

ABOUT THE AUTHOR

...view details