கொமொர்பிடிட்டி என்பது ஒரே நேரத்தில் ஒரு நபருக்கு ஒன்றுக்கு மேற்பட்ட நோய்கள் இருப்பதை குறிக்கிறது.
இவர்களுக்கு இத்தகயை நோய் பாதிப்புகள் நீண்ட காலங்களாக இருக்கும். குறிப்பாக நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம், உயர் கொழுப்பு, சிறுநீரகம், கல்லீரல் அல்லது இதய நோய் பிரச்னை உள்ளபவர்களுக்கு கரோனா தொற்று ஏற்பட்டால் மிகப்பெரிய ஆபத்து ஏற்படும் என ஹைதராபாத்தின் வின்என் மருத்துவமனையின் ஆலோசகர் மருத்துவர் டாக்டர் ராஜேஷ் வுக்கலா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், " கடந்த எட்டு மாதங்களாக கரோனா வைரஸ் பாதிப்பு அதிகளவில் உள்ளது. யார் பாதிக்கப்படுவார்கள் என்பதில் அதிகளவில் ஆராய்ச்சி நடத்தப்பட்டு வருகிறது.
இச்சமயத்தில் தான் கொமொர்பிடிட்டி’ என்ற வார்த்தையும் அதிகளவில் பகிரப்பட்டது. வயது பொறுத்து தான் உடல்நிலையில் மாற்றம் ஏற்படுகிறது.
எனவே தான், கரோனா நோய் பாதிப்பில் வயதுக்கு முக்கிய பங்கு இருக்கிறது. மேலும் அவர் கூறுகையில், " கடந்த சில ஆண்டுகளாக நீரிழிவு நோயை கட்டுபடுத்த சிகிச்சை எடுத்து வருபவர்களுக்கு கரோனா அதிகளவில் பாதிப்பை ஏற்படுத்தும்.
அதே போல், உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்கள் வைரஸால் பாதிக்கப்படுவதற்கான அதிக ஆபத்து உள்ளது. உயர் இரத்த அழுத்தம் உடலில் உள்ள இரத்த ஓட்டத்துடன் தொடர்புடையது. இரத்த ஓட்டம் சரியாக இல்லாவிட்டால், உடலின் செயல்பாடு மாறுபடுகிறது.