தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

ரேஷன் கடைகள் மூலம் பொது விநியோக முறையை செயல்படுத்தக் கோரி ஆர்ப்பாட்டம்! - புதுச்சேரியில் ரேஷன் கடைகள் செயல்பட கம்யூனிஸ்ட் ஆர்ப்பாட்டம்

புதுச்சேரி: ரேஷன் கடைகள் மூலம் பொது விநியோக முறையை செயல்படுத்தக் கோரி இடதுசாரி கட்சிகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Communist Party Protest In Pudhucherry
Communist Party Protest In Pudhucherry

By

Published : Jul 10, 2020, 12:27 AM IST

புதுச்சேரியில், பொது விநியோகத் திட்டத்தை மீண்டும் செயல்படுத்த வேண்டும், அரிசி, பருப்பு, சமையல் எண்ணெய் உள்ளிட்ட பொருள்கள் நியாய விலையில், நியாயவிலை கடைகள் மூலம் வழங்க வேண்டும்.

பிரதம மந்திரியின் கரிப் கல்யாண் திட்டத்தின்கீழ் ஏழை மக்களுக்கு பொருள்கள் வழங்க வேண்டும். புதிய சிவப்பு ரேஷன் அட்டை கோரி விண்ணப்பித்துள்ள ஏழை மக்களுக்கு ரேஷன் அட்டைகள் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மஞ்சள் ரேஷன் அட்டைதாரர்களுக்கு அரிசி வழங்கும் திட்டத்தில் ஆசிரியர்களை ஈடுபடுத்துவதை உடனடியாக கைவிடவேண்டும்.

நியாய விலை கடை ஊழியர்களை இப்பணியில் ஈடுபடுத்த வேண்டும் ஆகிய கோரிக்கையை வலியுறுத்தி சிபிஐ, சிபிஎம், சிபிஐ எம்எல் ஆகிய இடதுசாரிகட்சிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.

துணைநிலை ஆளுநர் மாளிகை அருகில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்ததலைவர் முருகன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில நிர்வாகக் குழு உறுப்பினர் நாரா.கலைநாதன், மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சி மாநில செயலாளர் சோ. பாலசுப்பிர மணியன் ஆகியோர் கூட்டாக தலைமை தாங்கினார்கள்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நிர்வாக குழு உறுப்பினர் வி. எஸ்.அபிஷேகம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பிரதேச செயலாளர் ராஜாங்கம், கட்சியின் நிர்வாக குழு உறுப்பினர் புருஷோத்தமன் உள்ளிட்ட இடதுசாரி கட்சி தொண்டர்கள் முகக்கவசம் அணிந்து தகுந்த இடைவெளியுடன் கோரிக்கை பதாகைகளை ஏந்தியவாறு ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.

இதையும் படிங்க:திமுக முன்னாள் எம்.எல்.ஏ. குழந்தை தமிழரசன் உயிரிழப்பு

ABOUT THE AUTHOR

...view details