தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

ஆறு அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியினர் போராட்டம்

புதுச்சேரி : இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி 32 மையங்களில் போராட்டம் நடைபெற்றது.

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியினர் போராட்டம்
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியினர் போராட்டம்

By

Published : May 13, 2020, 12:31 AM IST

புதுச்சேரி, தட்டாஞ்சாவடி தொகுதியின் 32 மையங்களில் ஆறு அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியினர் போராட்டம் நடத்தினர். தட்டாஞ்சாவடி தொகுதிக் குழு சார்பில் நடைபெற்ற இந்தப் போராட்டம் முன்னாள் நகர செயலாளர் ஆனந்தன் தலைமையில் நடைபெற்றது.

இதில், புதுச்சேரி மாநிலத்திற்கான கரோனா பேரிடர் நிவாரண நிதியை மத்திய அரசு உடனே வழங்கிட வேண்டும், புதுச்சேரி அரசு அம்மாநிலத்தின் ஒவ்வொரு குடும்பத்திற்கு கரோனா நிவாரண நிதியாக மேலும் 5500 ரூபாய் வழங்கிட வேண்டும் உள்ளிட்ட ஆறு அம்சக் கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

மேலும், நிவாரண அரிசி, பருப்பு வகைகளை ரேஷன் கடைகள் மூலம் வழங்கிடக்கோரியும், மஞ்சள் அட்டைதாரர்களுக்கு காலதாமதமின்றி உடனடியாக அரிசி, பருப்பு வகைகளை வழங்கிட வேண்டும், அத்தியாவசிய உணவுப் பொருட்களை, பொது விநியோகத் திட்டத்தின் மூலம் மீண்டும் வழங்கிட வேண்டும், ஊரடங்கு முடியும் வரையில் மதுபானக் கடைகளை திறக்கக்கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளும் வலியுறுத்தப்பட்டன.

நாடு முழுவதும் கரோனா ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள இந்த வேளையில், சமூக இடைவெளியைப் பின்பற்றி கோரிக்கை பதாகைகளை ஏந்தி இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் மையத்திற்கு 6 நபர்கள் வீதம், 32 மையங்களில் இப்போராட்டம் நடைபெற்றது.

இதையும் படிங்க :‘அடுத்த ஒரு வருடத்திற்கு தயார் நிலையில் இருக்க வேண்டும்’ - முதலமைச்சர் நாராயணசாமி

ABOUT THE AUTHOR

...view details