காஷ்மீர் மாநிலத்திற்கு அளிக்கப்பட்டிருந்த சிறப்பு அந்தஸ்தான சட்டப்பிரிவு 370ஐ மத்திய அரசு அதிரடியாக நீக்கியது. மாநிலம் இரண்டாகப் பிரிக்கப்பட்டு காஷ்மீர் சட்டப்பேரவையுடன் கூடிய யூனியன் பிரதேசமாகவும், லடாக் சட்டப்பேரவையற்ற யூனியன் பிரதேசமாகவும் மாற்றப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கையால் அங்கு சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படக் கூடாது என முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. சுமார் 50 ஆயிரம் பாதுகாப்புப் படையினர் அங்கு பணியமர்த்தப்பட்டனர். முன்னாள் முதலமைச்சர் உட்பட அங்குள்ள கட்சித் தலைவர்கள் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும், தொலைப்பேசி, இணையம் உள்ளிட்ட தொலைத் தொடர்பு சாதனங்கள் காஷ்மீர் மாநிலத்தில் துண்டிக்கப்பட்டன.