குடியுரிமை திருத்தச் சட்டம் தொடர்பாக டெல்லியில் ஏற்பட்ட கலவரத்தில் காவலர், உளவுத்துறை அலுவலர் உள்ளிட்ட 34 பேர் உயிரிழந்தனர். இது தொடர்பாக 18 பேர் மீது முதல் தகவல் அறிக்கை பதியப்பட்டு, சுமார் 106 பேரை கைது செய்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.
இந்த வன்முறையை அரசும் காவல்துறையும் முறையாக கையாளவில்லை என பலரும் குற்றஞ்சாட்டிவரும் நிலையில் உலக அரங்கிலும் இது தொடர்பான குரல்கள் ஒலிக்கத்தொடங்கியுள்ளன. அமெரிக்க எதிர்க்கட்சியான குடியரசுக் கட்சியின் அதிபர் வேட்பாளர் பெர்னி சான்டர்ஸ் டெல்லி கலவரம் குறித்து தனது கவலையை தெரிவித்தார். மேலும், மத சுதந்திரத்துக்கான அமெரிக்காவின் ஆணையம் இது குறித்து தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளது.