கரோனா வைரஸானது பொதுவாக பாதிக்கப்பட்ட நபரின் இருமல், தும்மல், பேச்சு, சுவாசத் துளிகள் ஆகியவற்றின் மூலம் பரவுவதாகக் கருதப்படுகிறது. கரோனா வைரஸ் பரவலைத் தடுப்பது குறித்து உலகம் முழுவதும் பல்வேறு ஆராய்ச்சிகள் துரித கதியில் நடைபெற்று வரும் நிலையில், ACS நானோ இதழில் இதுகுறித்து ஒரு அமெரிக்கக் குழுவின் ஆராய்ச்சி முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஒருவரும் இடம்பெற்றிருந்த, அமெரிக்க சிகாகோ பல்கலைக்கழகத்தின் இந்த ஆராய்ச்சிக் குழு, கரோனா வைரஸைத் தடுக்கும் துணிகளின் திறன் குறித்து ஆராய்ந்துள்ளனர்.