காரைக்கால் மாவட்ட முதுநிலை காவல் கண்காணிப்பாளராக பணியாற்றிய மகேஷ்குமார் பர்ன்வால், புதுச்சேரி குற்றம் மற்றும் புலனாய்வு பிரிவு பொறுப்பு அலுவலராக பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இதையடுத்து காரைக்கால் மாவட்ட முதுநிலை காவல் கண்காணிப்பாளராக நிகரி நிஹாரிகா பட் பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார்.
மாவட்ட எஸ்.எஸ்.பி.,யாக ஆட்சியரின் மனைவி நியமனம்! - காரைக்கால் ஆட்சியர்
புதுச்சேரி: காரைக்கால் மாவட்ட முதுநிலை காவல் கண்காணிப்பாளராக (எஸ்.எஸ்.பி) நிஹாரிகா பட் நியமிக்கப்பட்டுள்ளார்.
Collector's wife appointed as District Senior Superintendent of Police
இவர் புதுச்சேரியில் போக்குவரத்து காவல் பிரிவில் முதுநிலை காவல் கண்காணிப்பாளராக இருந்தார். பின்னர், புதுச்சேரி தலைமை செயலர் அஸ்வனி குமார் உத்தரவின் பேரில், காரைக்கால் மாவட்டத்தின் முதுநிலை காவல் கண்காணிப்பாளராக நிஹாரிகா பட் இன்று (ஆகஸ்ட் 12) பொறுப்பேற்றுக் கொண்டார். இவர், காரைக்கால் மாவட்ட ஆட்சியர் அர்ஜுன் சர்மாவின் மனைவி என்பது குறிப்பிடத்தக்கது.