புதுவை கடற்கரை சாலையில் சுமார் 200 ஆண்டுகளுக்கும் மேலான பழமையான இரண்டு மாடி நகராட்சிக் கட்டடம் உள்ளது. நகராட்சிக்கு சொந்தமானதாக இருக்கும் இக்கட்டடத்தின் மேல் பகுதியில் திருமண மண்டபம் இயங்கி வந்தது. இக்கட்டடம் மிகவும் பழுதடைந்து இருந்ததால், நகராட்சி அலுவலகம் வேறு இடத்துக்கு மாற்றப்பட்டது. இக்கட்டடத்தை புனரமைக்கும் பணி கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன் தொடங்கப்பட்டது.
இதற்கிடையே கட்டடம் மழையின் காரணமாக சேதம் அடைந்தது. இதையடுத்து ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ், மீண்டும் பழமை மாறாமல் கட்டப்பட்டு வருகிறது. இந்நிலையில் கட்டுமானப் பணி முடிவற்ற நிலையில் மாவட்ட ஆட்சியர் அருண் அங்கு சென்று ஆய்வுப் பணிகளை மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த மாவட்ட ஆட்சியர், 'பழமை வாய்ந்த இந்த மேரி கட்டடத்தின் பணி, வரும் ஜூன் மாதத்தில் முடிவடையும். இதேபோல் காமராஜர் மணிமண்டபத்தின் பணிகளும் விரைவில் முடிக்கப்பட உள்ளன.